“எப்படி ஆடுவது என்று இவரிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள்”!- சுனில் கவாஸ்கர் அறிவுரை!

0
1333

இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது இந்திய அணி. இந்த ஒரு நாள் போட்டி தொடர் முழுவதுமே இந்திய அணியின் ஆதிக்கம் தான் மேலோங்கி இருந்தது .

இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரில் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பான பங்களிப்பை அளித்தனர் . இந்தியாவின் முதல் ஐந்து பேட்ஸ்மேன்களில் ஸ்ரேயாஸ் ஐயரை தவிர்த்து மீதமுள்ள எல்லா பேட்ஸ்மன்களும் குறைந்தபட்சம் ஒரு அரை சதமாவது இந்த தொடரில் அடித்து இருக்கின்றனர் .

குறிப்பாக இந்திய அணியின் விராட் கோலி மற்றும் சுப்மன் கில் ஆகியோர் இந்தத் தொடரை பயன்படுத்தி தங்களின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர் . இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா இந்தத் தொடரில் நல்ல துவக்கங்களை பெற்றாலும் அவற்றை பெரிய ரண்களாக மாற்ற தவறிவிட்டார் என்று கூறலாம் . இதனைப் பற்றி இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் இந்தியா டுடே பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் தனது கருத்தை தெரிவித்து இருக்கின்றார் .

இது பற்றி கூறியுள்ள கவாஸ்கர் “விராட் கோலி மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆடிய இன்னிங்ஸ் மற்ற வீரர்களுக்கு ஒரு உதாரணமான ஆட்டம் என தெரிவித்திருக்கிறார் . இது பற்றி பேசியுள்ள அவர் விராட் கோலி தனது 100 ரண்களைக் கடக்கும் வரை எந்தவிதமான ரிஸ்க் ஷாட்களையும் ஆடவில்லை. அவர் நூறு ரண்களைக் கடப்பதற்கு முன்னர் ஒரே ஒரு சிக்சர் மட்டுமே அடித்து இருந்தார் இதேபோன்று ஒரு அணுகு முறையை மற்ற வீரர்களும் கடைப்பிடித்து ஆடி இருந்தால் அவர்களாலும் பெரிய இலக்கை எட்டி இருக்க முடியும் “என்று குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் தொடர்ந்து பேசிய சுனில் கவாஸ்கர் “ஆறு ரன்களுக்கும் நான்கு ரன்களுக்கும் இருக்கும் வித்தியாசம் வெறும் இரண்டு ரன்கள் தான் . அந்த அதிகபட்சமான இரண்டு ரன்கள் ஆசைப்பட்டு நீங்கள் ஆட்டம் இழக்கும் வாய்ப்பை 90 சதவீதம் அதிகப்படுத்துகிறீர்கள் . இந்தியாவின் சுப்மன் கில் ரோஹித் சர்மா மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற வீரர்கள் சிக்ஸர் அடிப்பதற்கு முயற்சி செய்தான் ஆட்டம் இழந்தார்கள் . விராட் கோலி பவுண்டரி மற்றும் ஒன்று ,இரண்டு ரன்கள் என அடித்தாலும் அவரது ஸ்ட்ரைக் ரேட் 100க்கு அதிகமாகவே இருக்கிறது . ஒரு இன்னிங்ஸை அவரைப் போல் கட்டமைக்க வேண்டும்”என்று கூறி முடித்தார் .

இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒரு நாள் போட்டி நாளை ஹைதராபாத்தில் நடைபெற இருக்கிறது . இந்த போட்டியில் ஆவது ரோஹித் சர்மா பெரிய ஸ்கோர் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது .