நாளை காமன்வெல்த் தங்கப்பதக்க போட்டியில் விளையாடும் வீராங்கனை தோனி பற்றி பேச்சு!

0
64
Lovely choubey ms.dhoni

தற்போது காமன்வெல்த் போட்டிகள் இங்கிலாந்து பர்மிங்ஹாம் நகரில் கோலாகலமாக நடந்து வருகிறது. இந்தியாவின் சார்பிலும் பல போட்டிகளுக்காகப் பல வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர்!

நடப்பு காமென்வெல்த் போட்டியில் இந்தியா சார்பில் இதுவரை, பளுத்தூக்குதல் பெண்களுக்கான 49 கிலோ எடைப்பிரிவில் மிராபாய் சானு தங்கப்பதக்கம், ஆண்களுக்கான 69 கிலோ எடைப்பிரிவில் ஜெரோமி பளுத்தூக்குதலில் தங்கப்பதக்கம், ஆண்களுக்கான 73 கிலோ எடைப் பிரிவில் அசின்டா செகுலி தங்கப்பதக்கம், பெண்களுக்கான 55 கிலோ எடைப்பிரிவில் பளுத்தூக்குதலில் பித்யாராணி தேவி வெள்ளிப்பதக்கம், ஆண்களுக்கான 55 கிலோ எடைப்பிரிவில் சங்கட் மகாதேவ் சர்கர் வெள்ளிப்பதக்கம், ஆண்களுக்கான 61 கிலோ எடைப்பிரிவில் பளுத்தூக்குதலில் குருராஜா பூஜாரி வெண்கலப் பதக்கம் என ஆறு பதக்கங்கள் வெல்லப்பட்டிருக்கிறது!

இந்த நிலையில் லான் பவுல் எனப்படும் புல்வெளி பந்துவீச்சு விளையாட்டில் இந்தியப் பெண்கள் அணி நாளை தங்கப்பதக்கத்திற்கான போட்டியில் விளையாட இருக்கிறது. இதில் இந்தியா சார்பில் லவ்லி சுப்பே, பிங்கி, ரூபா ராணி திர்கே, நயன்மோனி சய்கியா ஆகிய நால்வர் அணி பங்கேற்கிறது!

இதில் லவ்லி சுபே ஜார்க்கன்ட் மாநிலம் ராஞ்சி நகரைச் சேர்ந்தவர் ஆவார். இவருக்குத் தற்போது 42 வயதாகிறது. இவர் ஜார்க்கண்ட் காவல்துறையில் கான்ஸ்டபிளாக பணிபுரிந்து வருகிறார். இவர் முன்னின்று தலைமை வகிக்கும் இந்திய பெண்கள் லான் பவுலிங் அணி தற்போது தங்கப்பதக்கத்திற்கான இறுதிபோட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்தப் போட்டி நாளை நடைபெற உள்ளது!

இந்த நிலையில் இவர் இந்திய அணியின் முன்னாள் வீரரும் கேப்டனுமான மகேந்திர சிங் தோனியைப் பற்றி முக்கியக் கருத்து ஒன்றை தெரிவித்திருக்கிறார். இருவரும் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது!

லவ்லி சுபே மகேந்திர சிங் தோனி பற்றிக் கூறும்பொழுது “எம்.எஸ்.தோனி ஸார் எங்களை சந்திக்க பயிற்சி பகுதிக்கு இரண்டு முறை வந்துள்ளார். அவருக்கு லான் பவுலிங் விளையாட்டு பற்றி நிறைய தெரியும்” என்று தற்போது கூறியிருக்கிறார்!