பாகிஸ்தானின் அரையிறுதி வாய்ப்பு இனிமே இந்தியா கையில்! – சுவரஷ்யமான தகவல்!

0
1166

பாகிஸ்தான் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறுவதற்கு இந்தியாவை நம்பி இருக்கும் நிலை வந்துள்ளது. அதைப் பற்றிய விரிவான விளக்கத்தை இந்த பதிவில் காண்போம்.

நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை தொடரில் சூப்பர் 12 சுற்று விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. குரூப் 1ல் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதியை போட்டியில் இங்கிலாந்து அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. அடுத்ததாக குரூப் 2ல் ஜிம்பாவே மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் ஜிம்பாப்வே அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -

கத்துக்குட்டி அணிகளாக பார்க்கப்படும் இது போன்ற அணிகள் மிகப்பெரிய அணிகளை வீழ்த்தியது கிரிக்கெட் உலகில் இருக்கும் ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பையும் ஆர்வத்தையும் கூட்டியுள்ளது.

தற்போது பாகிஸ்தான் அணி அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவி இருப்பதால் அரையிறுதி போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பு வெகுவாக குறைந்து இருக்கிறது. மற்ற அணிகளை நம்பி இருக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக இந்தியாவை நம்பி இருக்கும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. அதைப்பற்றி நாம் இங்கே விரிவாக காண்போம்.

சூப்பர் 12 சுற்றில் ஒவ்வொரு அணியும் தலா 5 போட்டிகளில் விளையாடும். அதிகபட்சமாக 10 புள்ளிகளை ஒரு அணி பெற முடியும். குரூப் 2ல், ஏற்கனவே இந்திய அணி இரண்டு போட்டிகளின் முடிவில் நான்கு புள்ளிகளுடன் இருக்கிறது. தென் ஆப்பிரிக்கா அணி மூன்று புள்ளிகளில் உள்ளது. வங்கதேச அணி 2 புள்ளிகளில் உள்ளது. பாகிஸ்தான் அணி புள்ளிகள் ஏதும் இல்லை.

- Advertisement -

பாகிஸ்தான அணி மீதமிருக்கும் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே 6 புள்ளிகளை பெற முடியும். அப்படி 6 புள்ளிகளை பெற்றுவிடும் பட்சத்தில், தென் ஆப்பிரிக்கா அணிக்கு இன்னும் மூன்று போட்டிகள் மீதம் இருக்கின்றன. அந்த அணி இரு போட்டியில் தோல்வியை தழுவ வேண்டும். அப்போதுதான் ஐந்து புள்ளிகளுடன் பாகிஸ்தானை விட பின்தங்கி இருக்கும்.

அடுத்ததாக, வங்கதேச அணி மீதமிருக்கும் மூன்று போட்டிகளில் ஏதேனும் இரண்டில் தோல்விகளை தழுவினால் நான்கு புள்ளிகளுடன், பாகிஸ்தானைவிட பின்தங்கி இருக்கும். இந்திய அணி வரவிருக்கும் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெறும் பட்சத்தில் 10 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கும். பாகிஸ்தான் அணி இரண்டாவது இடத்தை பிடிக்கும்.

இதன் அடிப்படையில், பாகிஸ்தான் அணி அரை இறுதி போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பு இருக்கிறது. ஆகையால் இந்திய அணி மூன்று போட்டிகளிலும் வெல்ல வேண்டும் என்று பாகிஸ்தான் அணி நம்பிக்கையுடன் இருக்கும். அடுத்து வரும் போட்டிகளில் இந்தியாவிற்கு ஆதரவு கொடுக்கும் நிலையும் பாகிஸ்தான் அணிக்கு ஏற்பட்டிருக்கிறது.

இந்தியா-தென்னாபிரிக்கா அணிகள் மோதும் போட்டி பாகிஸ்தானுக்கு மிக முக்கியமான போட்டியாக இருக்கும். இந்தியா வெற்றி பெற்றால் மட்டுமே கூடுதல் வாய்ப்பு பாகிஸ்தானுக்கு இருப்பது குறிப்பிடத்தக்கது.