மும்பை அணியின் தொடர் தோல்வி குறித்து டிவிட்டர் பக்கத்தில் தன் கருத்தை பதிவு செய்துள்ள லசித் மலிங்கா

0
1841
Lasith Malinga and Rohit Sharma

ஐ.பி.எல் 2022-ஆம் ஆண்டின் பதினைந்தாவது சீஸனில், எந்த அணியின் இரசிகர்களும் எதிர்பாராத வெற்றிகளைத் தாண்டி தோல்விகள் தொடரில் கவனம் பெற்று வருவதோடு, டி.ஆர்.பி ரேட்டிலும் வெட்டு விழுந்துள்ளது.

காரணம், ஐ.பி.எல் தொடரின் பேரசர்கள் சென்னை, மும்பை அணிகளின் தொடர் தோல்விகள்தான். சென்னை நான்கு தொடர் தோல்விகளைச் சந்தித்து, ஐந்தாவது ஆட்டத்தில் ஒரு வெற்றியைப் பெற்றிருக்க, மும்பையோ தன் ஆறாவது ஆட்டத்திலும் தொடர்ந்து தோற்றிருக்கிறது.

- Advertisement -

சில பிரபல முன்னாள் வீரர்கள் மும்பை அணியின் ஏல அணுகுமுறையை வெளிப்படையாகவே விமர்சித்து வருகிறார்கள். இஷான் கிஷனுக்கு 15 கோடியையும், ஆடாத ஆர்ச்சருக்கு 8 கோடியையும் செலவிட்டது தற்போது விமர்சனமாகி வருகிறது.

இந்த நிலையில் மும்பை அணியின் முன்னாள் பிரபல வீரரும், தற்போது ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளருமான லசித் மலிங்கா, மும்பை அணியைப் பற்றி தனது கருத்தைத் தெரிவித்திருக்கிறார். அதில் “மும்பை எப்பொழுதுமே மீண்டெழுந்து வரும் அணியாகவே இருந்திருக்கிறார்கள். இந்த ஆண்டு அவர்கள் ப்ளே-ஆப்ஸ் செவ்லாவிட்டாலும், தொடரின் இறுதியில் நல்ல நிலையை எட்டுவார்கள். மும்பை அணியின் முக்கிய வீரர்கள், அணி நிர்வாக குழுவினர் அணியை முன்னோக்கி எடுத்துச் செல்வார்கள். அதற்கான தரமும் திறமையும் அவர்களுக்கு இருக்கிறது” என்று கூறியுள்ளார்.