உலகிலேயே டாப் 5 மிகப்பெரிய கிரிக்கெட் மைதானங்கள்

0
369
Melbourne Cricket Ground

கிரிக்கெட் போட்டிகளை அனைத்து ரசிகர்களும் நேரில் சென்று மைதானத்தில் கண்டு களிப்பது கிடையாது. ஒரு சில வீரர்கள் வீட்டில் இருந்தபடியே டிவியில் கண்டு களிப்பார்கள். ஆனால் ஒரு சிலர் கிரிக்கெட் போட்டியை எவ்வளவு தொகை கொடுத்து டிக்கெட் வாங்கி மைதானத்திற்கு நேரில் சென்று பார்ப்பார்கள்.

டிவியில் குடும்பத்துடனும் நண்பர்களுடனும் சேர்ந்து கிரிக்கெட் போட்டிகளை பார்த்தாலும் மைதானத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் ஒருவராக அமர்ந்து தங்களது விருப்பு வீரர்கள் விளையாடுவதை நேரில் கண்டு பார்ப்பதுபோல் உற்சாகம் வீட்டில் தொலைக்காட்சியில் பார்க்கும் பொழுது கிடைக்காது. அப்படிப்பட்ட கிரிக்கெட் மைதானங்களில், மிகப்பெரிய டாப் 5 கிரிக்கெட் மைதானங்கள் எவையென்று தற்போது பார்ப்போம்.

1. நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானம் குஜராத்

தற்பொழுது உலகிலேயே மிகப் பெரிய மைதானம் எது என்று பார்த்தால் நம் இந்தியாவிலுள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானம். இந்த மைதானம் 1982 ஆம் ஆண்டு கட்டப்பட்டது, சர்தார் பட்டேல் ஸ்டேடியம் என இருந்த இந்த மைதானத்தை புதுப்பித்து தற்போது மீண்டும் மிகப்பெரிய அளவில் கட்டமைத்து இருக்கின்றனர். அதற்கு புதிய பேராக நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானம் என்கிற பெயர் வைத்துள்ளனர்.

ஒரே நேரத்தில் சுமார் ஒரு லட்சத்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உட்கார்ந்து பார்க்கும் அளவுக்கு இந்த மைதானம் மிகப் பெரியது. தற்பொழுது புதுப்பித்து கட்டப்பட்ட இந்த மைதானத்தின் செலவு சுமார் 800 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. புதுப்பித்து கட்டப்பட்ட இந்த மைதானத்தை அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் வந்து திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

2. மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம்

உலகிலேயே மிகப்பெரிய இரண்டாவது மைதானமாக இருப்பது ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் கிரிக்கெட் 1853 ஆம் ஆண்டு சுமார் ஒரு லட்சம் பேர் உட்கார்ந்து பார்க்கும் படி இந்த மைதானத்தை கட்டி முடித்தனர்.

இந்த மைதானத்தில் தான் முதல் டெஸ்ட் போட்டி நடந்தது. முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதிக்கொண்டன. 1877 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15ஆம் தேதி துவங்கப்பட்டு 19 தேதி வரை முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

3. ஈடன் கார்டன்ஸ்

உலகிலேயே மிகப்பெரிய மூன்றாவது மைதானமாக இருப்பது நமது கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ்.
ஒரே நேரத்தில் சுமார் 66 ஆயிரத்து 349 பேர் பார்க்கும் அளவுக்கு 1864 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.

இந்த மைதானத்தை இந்திய கிரிக்கெட்டின் மெக்கா என்றுகூட சிலர் அழைப்பார்கள். அந்த அளவுக்கு பல மறக்க முடியாத சில போட்டிகள் இங்கு நடைபெற்று இருக்கிறது. இந்த மைதானத்தில் 1934 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5-ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

4. ஷஹீத் வீர் நாராயண் சிங் இன்டர்நேஷனல் கிரிக்கெட் ஸ்டேடியம்

உலகிலேயே நான்காவது மிகப்பெரிய மைதானம் ஆக கருதப்படுவது சட்டீஸ்கரில் உள்ள இந்த மைதானம் தான். 2008ஆம் ஆண்டு இந்த மைதானம் கட்டப்பட்டது. இந்த மைதானத்தில் ஒரே நேரத்தில் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உட்கார்ந்து பார்க்கும்படி கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மிகப் பெரிய மைதானமாக இருந்தாலும் இந்த மைதானத்தில் ஒரு சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மைதானத்தில் விளையாடப்பட்ட முதல் போட்டி சட்டீஸ்கர் ரஞ்சனிக்கும் கனடா தேசிய அணிக்கும் இடையே 2010ஆம் ஆண்டு நடைபெற்ற பயிற்சி போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

5. ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானம்

உலகிலேயே மிகப்பெரிய ஐந்தாவது மைதானமாக இருப்பது நமது ஹைதராபாதில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானம். இந்த மைதானம் 2003 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. ஒரே நேரத்தில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உட்கார்ந்து பார்க்கும் போது இந்த மைதானம் கட்டப் பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி 2010 ஆம் ஆண்டு நவம்பர் 12-ஆம் தேதி முதல் 14ம் தேதி வரை நடைபெற்றது. அந்த போட்டி இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.