பாகிஸ்தான் பிரீமியர் லீகில் முதல் முறை லாகூர் அணி சாம்பியன்ஸ் – அனைத்து வீரர்கள் பெற்ற விருது & பரிசு விபரம் இணைப்பு

0
1055
Lahore Qalandars Champions PSL

இந்த ஆண்டிற்கான பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் நேற்று நடைபெற்று முடிந்தது. இறுதிப்போட்டியில் முல்தான் சுல்தான்ஸ் மற்றும் லாகூர் க்வாலான்டர்ஸ் அணிகள் மோதியது. இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற லாகூர் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி அந்த அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் குவித்தது. லாகூர் அணியில் அதிகபட்சமாக முகமது ஹபீஸ் 46 பந்துகளில் 69 ரன்கள் குவித்தார்.

பின்னர் விளையாடிய முல்தான் அணி கடைசி ஓவரில் (19.3 ஆவது ஒவரில் ) 10 விக்கெட்டுகளையும் இழந்து 138 ரன்கள் மட்டுமே குவித்தது. போட்டியின் முடிவில் 42 ரன்கள் வித்தியாசத்தில் லாகூர் அபார வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. நடுந்து முடிந்துள்ள பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் மிக சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு விருதும், பரிசும் வழங்கபட்டது. அதை பற்றி தற்போது பார்ப்போம்.

- Advertisement -

சாம்பியன் அணிக்கான விருது :

முதல் போட்டி முதல் இறுதிப் போட்டி வரை மிகச் சிறப்பாக விளையாடி கோப்பையை கைப்பற்றிய லாகூர் அணிக்கு சாம்பியன் பட்டத்தை ஓடும் மட்டுமல்லாமல் விருதாக பாகிஸ்தான் மதிப்பில் 8 மில்லியன் ரூபாய் (இந்திய மதிப்பில் 3,39,40,726 ரூபாய் ) பரிசாக கொடுக்கப்பட்டது.

தொடர் நாயகன் விருது :

முல்தான் அணியின் கேப்டன் முஹம்மது ரிஸ்வான் 12 போட்டிகளில் மொத்தமாக 546 ரன்கள் குவித்தார். அது மட்டுமின்றி தனது அணியை மிகச் சிறப்பாக வழிநடத்தி இறுதிப்போட்டி வரை முன்னேற செய்தார். அதன் காரணமாக இவருக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது. தொடர் நாயகன் விருதுக்கு பரிசாக பாகிஸ்தான் மதிப்பில் 3 மில்லியன் ( இந்திய மதிப்பில் 12,72,323 ரூபாய் ) முஹம்மது ரிஸ்வான் பெற்றார்.

சிறந்த விக்கெட் கீப்பர் விருது:

அதுமட்டுமின்றி விக்கெட் கீப்பராக 12 போட்டிகளில் 9 பேட்ஸ்மேன்களின் விக்கெட்டை கைப்பற்றியிருக்கிறார். மிக சிறப்பாக விக்கெட் கீப்பிங் செய்த காரணத்தினால் நடந்து முடிந்த இந்த ஆண்டு பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் சிறந்த விக்கெட் கீப்பர் விருதையும் ரிஸ்வான் கைப்பற்றினார். சிறந்த விக்கெட் கீப்பர் விருதுக்கு பரிசாக பாகிஸ்தான் மதிப்பில் 3.5 மில்லியன் ( இந்திய மதிப்பில் 14,84,859 ரூபாய் ) ரிஸ்வான் பரிசாக பெற்றார்.

- Advertisement -

சிறந்த பேட்ஸ்மேன் மற்றும் சிறந்த பந்துவீச்சாளர் விருது :

நடந்து முடிந்த தொடரில் 13 போட்டிகளில் விளையாடி மொத்தமாக 588 ரன்கள் குவித்து அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் லாகூர் அணி வீரர் ஃபகார் ஜமான் சிறந்த பேட்ஸ்மேன் விருதையும், 9 போட்டிகளில் 19 விக்கெட்டுகளை கைப்பற்றிய இஸ்லாமபாத் அணி வீரர் சதாஃப் கான் சிறந்த பந்துவீச்சாளர் விருதையும் கைப்பற்றினர். இவர்கள் இருவருக்கும் பரிசாக பாகிஸ்தான் மதிப்பில் தனித்தனியே தலா 3.5 மில்லியன் ரூபாய் ( இந்திய மதிப்பில் 14,84,859 ரூபாய் ) வழங்கப்பட்டது.

சிறந்த ஆல்ரவுண்டர் மற்றும் சிறந்த ஃபீல்டருக்கான விருது :

முல்தான் அணியைச் சேர்ந்த குஸ்தில் ஷா சிறந்த ஆல்ரவுண்டர் விருதை கைப்பற்றினார். பேட்டிங்கில் 153 ரன்கள் அடித்து பந்துவீச்சில் 16 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியிருக்கிறார். நடந்து முடிந்துள்ள தொடரில் இவருடைய பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட் 183 மற்றும் இவருடைய பவுலிங் எக்கானமி 6.9 ஆக இருந்துள்ளது. அதேபோல சிறந்த ஃபீல்டர் விருதையும் இவரே கைப்பற்றினார்.

இவருக்கு சிறந்த ஆல்ரவுண்டர் வீரருக்கு பரிசாக பரிசாக பாகிஸ்தான் மதிப்பில் 3.5 மில்லியன் ரூபாயும்( இந்திய மதிப்பில் 14,84,859 ரூபாய் ), சிறந்த ஃபீல்டர் விருதுக்கு பரிசாக பாகிஸ்தான் மதிப்பில் மற்றொரு 3.5 மில்லியன் ரூபாய் இந்திய மதிப்பில் 14,84,859 ரூபாய்) வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

எமர்ஜிங் வீரருக்கான விருது :

லாகூர் அணியைச் சேர்ந்த இளம் வீரர் ஜமான் எமர்ஜிங் வீரருக்கான விருதை கைப்பற்றினார். நடந்து முடிந்துள்ள தொடரில் 13 போட்டிகளில் இவர் 18 விக்கட்டுகளை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. இவருக்கும் பரிசாக பாகிஸ்தான் மதிப்பில் 3.5 மில்லியன் ரூபாய் இந்திய மதிப்பில் 14,84,859 ரூபாய்) வழங்கப்பட்டது.

சிறந்த நடுவருக்கான விருது :

தொடர் முழுக்க மிகச்சிறப்பாக நடுவர் பணியை செய்த ரஷித் ரியாஸ் நடுவதற்கு பரிசாக பாகிஸ்தான் மதிப்பில் 3.5 மில்லியன் ரூபாய் இந்திய மதிப்பில் 14,84,859 ரூபாய்) வழங்கப்பட்டது.

ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் விருது :

தொடர் முழுக்க ஒழுக்க நெறிகளை பின்பற்றி கண்ணியத்துடன் விளையாடிய அணிக்கு ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் விருது வழங்கப்படும். அந்த விருதை முல்தான் சுல்தான் அணி கைப்பற்றியது. அந்த விருதிற்கு பரிசாக பாகிஸ்தான் மதிப்பில் 3.5 மில்லியன் ரூபாய் இந்திய மதிப்பில் 14,84,859 ரூபாய்) வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.