ஆர்சிபி 15 கோடிக்கு எடுத்தும் ஒழுங்கா ஆடாத வீரரை, எதுக்காக 1 கோடிக்கு எடுத்துட்டோம்? – காசி விஸ்வநாதன் பேட்டி!

0
20926

ஆர்சிபி அணிக்கு சரியாக செயல்படாத வீரரை, எதற்காக ஒரு கோடி கொடுத்து எடுத்தோம்? என்று பதில் அளித்துள்ளார் காசி விஸ்வநாதன்.

ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு வெளிநாட்டு ஆல்ரவுண்டரை எடுக்க வேண்டும் என்று இறங்கியது. ஷாம் கர்ரன் முதல் சாய்ஸாக இருந்தார். ஆனால் அவர் அளவுக்கு மீறிய பணத்திற்கு சென்றுவிட்டதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் எடுக்க முடியவில்லை.

- Advertisement -

அடுத்ததாக பென்ஸ் ஸ்டோக்ஸ் மீது குறிவைத்தது. வைத்த குறி தப்பவில்லை. 16.25 கோடிக்கு கடைசியில் சிஎஸ்கே அணிக்கு எடுக்கப்பட்டு விட்டார். அதற்கு அடுத்த அதிகபட்சமாக ஒரு கோடி ரூபாய்க்கு நியூசிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் கைல் ஜெமிசன் எடுக்கப்பட்டிருக்கிறார்.

கடந்த ஏலத்தில் சுமார் 15 கோடிக்கு மேல் ஆர்சிபி அணியால் எடுக்கப்பட்டார். எதிர்பார்த்த அளவுக்கு செயல்படவில்லை என்பதால் அவரை வெளியேற்றி விட்டது ஆர்சிபி அணி.

இந்நிலையில் ஆரம்ப விலையாக ஒரு கோடி ரூபாயில் இருந்த அவரை வேறு எந்த அணியும் எடுக்க முற்படவில்லை. சிஎஸ்கே அணி முன்வந்து ஒரு கோடி ரூபாய்க்கு எடுத்தது.

- Advertisement -

15 கோடி ரூபாய்க்கு எடுத்தும் சரிவர செயல்படாத வீரரை எதற்காக ஒரு கோடி ரூபாய் கொடுத்து எடுத்தோம்? என்று பேட்டியில் விளக்கம் அளித்திருக்கிறார் காசி விஸ்வநாதன். அவர் கூறியதாவது:

டி20 உலக கோப்பைக்கு முன்பு காயம் ஏற்பட்டு போட்டிகளில் விளையாடாமல் இருப்பதால் அவரை பல அணிகள் எடுப்பதற்கு முன்வரவில்லை. ஏலம் துவங்குவதற்கு முன்பு பிளமிங் இடம் நான் பேசினேன். ஜாமிஷன் காயத்திலிருந்து குணமடைந்து தற்போது நன்றாக பயிற்சி செய்து வருவதாக அவர் கூறினார்.

ஜாமிஷன் போன்ற உயரமான வேகப்பந்துவீச்சாளர் தேவை என இருந்தோம். ஆடம் மில்னே வெளியேற்றப்பட்டதற்கு மாற்று வீரர் தேவைப்பட்டது. இவர் சரியாக இருப்பார் என நினைத்து ஏலத்தில் கேட்டோம். அதிர்ஷ்டவசமாக ஆரம்ப விலைக்கு கிடைத்துவிட்டார். ஒரு வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளர் இடம் காலியாக இருக்கிறது. அதற்கு சரியான வீரராக இருப்பார் என நினைக்கிறேன். ஏலத்தில் எடுத்தவுடன் பிளம்மிங் இடம் கூறினேன் அவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.” என்றார்.