ஆர்சிபி டக் அவுட்டில் இருக்கும் பெண்மணி யார் தெரியுமா ?

0
305
Kyle Jamieson and Navnita Gautam

ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் பெங்களூர் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. பெரிதாக பேட்டிங் பலம் கொண்ட பெங்களூரு அணியை
பெரிதாக அனுபவம் அற்ற வீரர்களைக் கொண்ட கொல்கத்தா அணி எளிதாக வெற்றி பெற்றது. குறிப்பாக தமிழக வீரரான வருண் சக்கரவர்த்தி மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். வருண் சக்கரவர்த்தியின் சுழலில் சிக்கிய பெங்களூரு அணியால் கடைசி வரை மீளவே முடியவில்லை. வெறும் 93 என்ற இலக்கை துரத்திய கொல்கத்தா அணி அதை 9 ஓவர்களில் எட்டிப்பிடித்தது. கொல்கத்தா அணிக்கு அதிக பட்சமாக சுப்மன் கில் 34 பந்துகளில் 48 ரன்கள் எடுத்தார்.

இந்த ஆட்டத்தில் கவனத்தை ஈர்த்த மற்றொரு விஷயம் ஆர்சிபி அணியின் பக்கத்தில் அமர்ந்திருந்த பெண் ஒருவர். பெங்களூரு வீரரான ஜெமிசன் அந்தப் பெண்மணியிடம் பேசிக்கொண்டு இருப்பது போன்ற ஒரு புகைப்படம் நேற்று சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. அந்தப் பெண் யார் என்பது தல ரசிகர்களுக்கு தெரியாத காரணத்தினால் இவர் யார் என்பதை அறிய வேண்டிய ஆவல் பலருக்கும் ஏற்பட்டது. யாருக்கும் தெரியாத கேள்விக்கு தற்போது விடை கிடைத்துள்ளது.

அந்தப் பெண்ணின் பெயர் நவ்நிதா கௌதம் என்றும் அவர் கனடா நாட்டைச் சார்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. எப்போதும் அணியின் உரிமையாளர்களும் பயிற்சியாளர்களும் தான் அதிகமாக டக் அவுட்டில் அமர்ந்து இருப்பர். ஆனால் இந்த முறை ஒரு பெண் அமர்ந்து இருப்பது பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது. இந்த நவ்நிதா கௌதமை பெங்களூரு அணி கடந்த 2019ஆம் ஆண்டு மசாஜ் தெரபிஸ்ட் ஆக நியமனம் செய்துள்ளது.

இதற்கு முன்பு கனடா நாட்டில் நடந்த குளோபல் டி20 தொடரில் டொராண்டோ நேஷனல் சென்ற அணிக்கு இவர் மசாஜ் தெரப்பிஸ்ட்டாக இருந்துள்ளார். கனடா நாட்டில் அதிகமாக கிரிக்கெட்டிற்கு முக்கியத்துவ ம் கொடுக்கப்படாததால் 2017 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வந்துள்ளார் இவர். இதற்கு முன்பு டெக்கான் சார்ஜர்ஸ் அணி இரண்டு பெண் தெரப்பிஸ்ட்டுகளை தனது அணியில் வைத்திருந்தாலும் அது ஐபிஎல் தொடரின் முதல் சீசனில் ஆகும். கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு பெண் தெரப்பிஸ்ட்டை ஒரு அணி நியமித்துள்ளது.

பெங்களூர் அணியில் ஒப்பந்தம் ஆவதற்கு முன்னால் இந்திய பேஸ்கட்பால் அணிக்கு இவர் மசாஜ் தெரப்பிஸ்ட்டாக இருந்துள்ளார். யார் யாரென்று தேடிக்கொண்டிருந்த பெண் தற்போது யார் என்று தெரிந்து உள்ளதால் அதை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.