டிரெஸ்ஸிங் ரூமில் ராஜஸ்தான் அணி வீரர்களுக்கு பாகுபலி பிரபாஸ் போல ஊக்கமளித்த குமார சங்ககாரா – வீடியோ இணைப்பு

0
87

டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் நேற்று டெல்லி அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் குவித்தது. ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக ரவிச்சந்திரன் அஸ்வின் 50 ரன்கள் குவித்தார்.

பின்னர் விளையாடிய டெல்லி அணி 19வது ஓவரின் முதல் பந்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி நிர்ணயித்த இலக்கை எட்டி வெற்றி பெற்றது. டெல்லி அணியில் அதிகபட்சமாக மிட்ச்செல் மார்ஷ் 89 ரன்கள் குவித்தார்.

14 புள்ளிகளுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முயற்சி செய்து கொண்டிருக்கிறது. அந்த அணிக்கு இன்னும் இரண்டு போட்டிகள் மீதமிருக்கும் நிலையில் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும். இரண்டு போட்டியிலும் வெற்றி பெறும் பட்சத்தில் நிச்சயமாக அந்த அணி ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும்.

வீரர்களுக்கு நம்பிக்கையை அளித்த பயிற்சியாளர் சங்ககாரா

இழப்பது கடினமானது,சண்டையிடுவது கடினமானது. ஆனால் நாம் கடினமான விஷயங்களை கண்டு அஞ்சக்கூடாது. அதை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் கிடைத்த தோல்வியை நினைத்து கவலை கொள்ள வேண்டாம்.

நாம் யார் என்பது நமக்கு நன்றாக தெரியும். நம்முடைய திறமை என்ன என்பது நம் அனைவருக்கும் நன்றாக தெரியும். தைரியத்தை இழந்து விட வேண்டாம் அனைவரும் சந்தோசமாக இருங்கள். நாம் தற்போது எந்த வித மனச்சோர்வும் என்று அமைதியாக இருக்க வேண்டும்.

நம் திட்டமிட்ட விஷயங்களை நம்முடைய சிறந்த ஆட்டத்தை இனி வரும் போட்டிகளில், வாய்ப்பு கிடைக்கும் நேரத்தில் வெளிப்படுத்த வேண்டும். நம்மால் அது முடியும் நாம் அதை தொடர்வோம். ஓகே வெல்டன் பாய்ஸ்”, என்று குமார சங்கக்காரா ராஜஸ்தான் அணி வீரர்களுக்கு டிரெஸ்ஸிங் ரூமில் பாசிட்டிவாக அனைத்து விஷயங்களையும் எடுத்துக் கூறினார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு இன்னும் லக்னோ மற்றும் சென்னை அணிகளுக்கு எதிராக இரண்டு போட்டிகள் மீதம் உள்ளது குறிப்பிடத்தக்கது