நடப்பு ஆசியக் கோப்பையில் இந்தியா விளையாடிய இரண்டு போட்டிகளிலும் ஆட்டநாயகன் விருது வென்ற குல்தீப் யாதவ் தன்னுடைய பந்து வீச்சுக்கு உதவிய இந்திய வீரர் குறித்து பேசி இருக்கிறார்.
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் முதல் போட்டியிலேயே விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட குல்தீப் யாதவுக்கு ஐந்து போட்டிகளிலும் வாய்ப்பு தராதது பெரிய அதிர்ச்சியை உருவாக்கியிருந்தது. இந்த நிலையில் ஆசியக் கோப்பைக்கு திரும்பிய அவர் முதல் இரண்டு போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டு ஆட்டநாயகன் விருதை வென்றிருக்கிறார்.
இதுகுறித்து குல்தீப் யாதவ் பேசும்பொழுது ” என்னுடைய பந்துவீச்சில் நிறைய உதவிகள் செய்து கொண்டிருப்பது அக்சர் படேல். இவர் என்னுடைய கேப்டன். நான் பந்து வீசும் போது பந்தில் அதிக சுழற்சியை கொடுக்க சொன்னார். அந்த வார்த்தைகள் என்னை தாக்கின. ஏனென்றால் நான் முதல் ஓவர் வீசும் பொழுது இன்னும் கொஞ்சம் பந்தை சுழற்ற வேண்டும் என்று நினைத்தேன். அங்கிருந்து மேலும் ஐந்து விக்கெட்டுகள் கிடைத்தது. இது ஒரு கூட்டு முயற்சி”
“ஆனால் அக்சர் படேல் மிகவும் சிறப்பாக பந்து வீசினார். இதற்கு அவருக்கு ஸ்பெஷல் கிரெடிட் கொடுக்க வேண்டும். மேலும் போட்டியில் அவர் எனக்கு முன்பாகவே பந்து வீசி இருந்ததால் அந்த நிலைமையில் பந்து எவ்வாறு செயல்படுகிறது என்று அவர் அறிந்திருக்கலாம்”
” நாங்கள் இங்கு விளையாடிய இரண்டு போட்டிகளிலும் ஆடுகளம் வித்தியாசமாகவே இருந்தது. நான் கடைசியாக பந்து வீசிய பொழுது என்னுடைய வேகம் பேட்டர்களுக்கு சுலபமாக இருக்கிறது என்று உணர்ந்தேன். எனவே கொஞ்சம் மாறுதல்கள் செய்தேன். அதைத்தொடர்ந்து கொஞ்சம் மெதுவாக வீசினேன். அது பலன் அளித்தது”
இதையும் படிங்க : பாகிஸ்தான் கிரிக்கெட் உருப்படாம போக காரணம் இதுதான்.. எங்க ஹாக்கிய பாருங்க புரியும் – கம்ரன் அக்மல் பேச்சு
“நீண்ட நாட்களுக்குப் பிறகு விளையாடும் உணர்வு நன்றாக இருக்கிறது. பந்து வீச்சு பயிற்சி மற்றும் உடல் தகுதியில் இங்கிலாந்தில் நான் இரண்டு மாதங்கள் கடுமையாக உழைத்திருக்கிறேன். அதேபோல சூழ்நிலைகள் சாதகமாக இருந்தால் நிச்சயம் எனக்கு ஆசிய கோப்பையில் விளையாட வாய்ப்பு கிடைக்கும் என்று தெரியும்” எனக் கூறியிருக்கிறார்.