பல மாதங்களுக்குப் பிறகு இந்திய அணியில் நுழையும் குல்தீப் யாதவ் ; முன்னாள் இளம் பஞ்சாப் ஸ்பின்னருக்கும் வாய்ப்பு

0
127
Kuldeep Yadav

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் இந்திய அணி தோல்வி அடைந்தது இந்திய ரசிகர்களை பெரிதும் ஏமாற்றியது. தற்பொழுது அனைத்து இந்திய ரசிகர்களும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் ஒரு நாள் மற்றும் டி-20 தொடரை காண ஆவலாக உள்ளனர்.

பிப்ரவரி 6ஆம் தேதி துவங்கி 20ஆம் தேதி வரை 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் தொடர்ச்சியாக நடைபெற உள்ளன. 3 ஒருநாள் போட்டிகள் அகமதாபாத்திலும், 3 டி20போட்டிகள் கொல்கத்தாவில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. காயம் காரணமாக தென்ஆப்பிரிக்கா தொடரில் இருந்து விலகிய ரோஹித் ஷர்மா தற்போது நல்ல உடல் நிலையுடன் இருக்கிறார் என்பது கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

அவரது தலைமையிலான இந்திய அணி ஒருநாள் மற்றும் டி20 தொடரை மிக சிறப்பாக விளையாடி அவ்விரண்டு தொடரையும் கைப்பற்ற வேண்டும் என்பதே அனைத்து இந்திய ரசிகர்களின் விருப்பமாக தற்போது உள்ளது.

டி20 தொடரில் களமிறங்க இருக்கும் குல்தீப் யாதவ் மற்றும் ரவி பிஷ்னோய்

குல்தீப் யாதவ் கடந்த ஆண்டு ஜூலை மாதம் இலங்கை அணிக்கு எதிராக கடைசியாக டி20 போட்டியில் விளையாடி இருந்தார். இதனையடுத்து சுமார் எட்டு மாதம் கழித்து மீண்டும் இந்திய அணியில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான நடைபெற இருக்கும் டி20 போட்டிகளில் குல்தீப் யாதவ் இணைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

23 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 41 விக்கெட்டுகளை இதுவரை அவர் கைப்பற்றியிருக்கிறார். அதேசமயம் டி20 போட்டிகளில் அவருடைய பௌலிங் ஆவெரேஜ் 14.22 மற்றும் எக்கானமி 7.15.

- Advertisement -

அதேசமயம் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் மற்றும் ஐபிஎல் தொடர்களில் கடந்த சில ஆண்டுகளாக கலக்கி வரும் ரவி பிஷ்னோயும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடரில் இணைக்கப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் தன்னுடைய முதல் சர்வதேச டி20 போட்டியில் அவர் களமிறங்கி விளையாடப் போகிறார்.

ஐபிஎல் தொடரை பொருத்தவரையில் ரவி பிஷ்னோய் 23 போட்டிகளில் விளையாடி 24 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். ஐபிஎல் தொடரில் அவருடைய பௌலிங் ஆவெரேஜ் 25.25 மற்றும் எக்கானமி 6.97.

குல்தீப் யாதவ் மற்றும் ரவி பிஷ்னோயின் வருகை ஸ்பின் பந்து வீச்சில் இந்திய அணிக்கு பலம் சேர்க்கும் என்றே நாம் எதிர்பார்க்கலாம்.