முதல் இன்னிங்சில் 150க்குள் சுருண்ட அணியால், இரண்டாவது இன்னிங்சில் 300+ ஸ்கொரை எப்படி அடிக்க முடிந்தது? – ஆட்டநாயகன் குல்தீப் யாதவ் பேட்டி!

0
1139

இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 8 விக்கெட்டுகள், பேட்டிங்கில் முக்கியமான கட்டத்தில் 40 ரன்கள் அடித்த குல்தீப் யாதவ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

வங்கதேசம்-இந்தியா அணிகளுக்கு இடையே நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்தது இந்திய அணி. ஷ்ரேயாஸ் 86 ரன்கள், புஜாரா 90 ரன்கள் மற்றும் அஸ்வின் 58 ரன்கள் அடிக்க, இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 404 ரன்கள் அடித்தது.

- Advertisement -

வங்கதேசம் அணிக்கு இந்தியாவைப்போல முதல் இன்னிங்சில் அமையவில்லை. பேட்ஸ்மேன்கள் எவரும் நிலைத்து ஆடாததால், 150 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அபாரமாக பந்துவீசிய குல்தீப் 5 விக்கெட்டுகளும் மற்றும் சிராஜ் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

254 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸ் பேட்டிங் செய்த இந்தியாவிற்கு சுப்மன் கில் மற்றும் புஜாரா இருவரும் அடிக்க, இந்திய அணி 258/2 எடுத்திருந்தது. இந்தியா 512 ரன்கள் முன்னிலையுடன் டிக்ளேர் செய்தது.

513 ரன்களை சேஸ் செய்ய களமிறங்கிய வங்கதேசம் அணியின் துவக்க ஜோடி சான்டோ மற்றும் சாகிர் இருவரும் முதல் விக்கெட்டுக்கு 124 ரன்கள் சேர்த்தனர். சான்டோ 67 ரன்களுக்கும், அறிமுக வீரர் சாகிர் உசேன் சதம் அடித்தும் நல்ல துவக்கம் அமைத்துக் கொடுத்து ஆட்டமிழந்தனர்.

- Advertisement -

மற்ற வீரர்கள் விக்கெட்டை இந்தியா எளிதாக வீழ்த்தியது. கேப்டன் சாகிப் அல் ஹசன் இறுதிவரை போராடி 84 ரன்களுக்கு அவுட்டானார். அக்ஸர் பட்டேல் மற்றும் குல்தீப் இருவரும் சுழலில் மொத்த வங்கதேச அணியும் 2வது இன்னிங்சில் 324 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. 188 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 1-0 என முன்னிலை பெற்றது.

இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 8 விக்கெட்டுகள், பேட்டிங்கில் முக்கியமான கட்டத்தில் 40 ரன்கள் அடித்த குல்தீப் யாதவ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். அப்போது அவர் பேசியதாவது:

“உண்மையாகவே தற்சமயம் மிகுந்த மகிழ்ச்சியாக உணர்கிறேன். பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலும் பங்களிப்பை கொடுத்தது அளப்பரியா மகிழ்ச்சியை தருகிறது. இரண்டாவது இன்னிசை விட முதல் இன்னிங்சில் பந்து சற்று வேகமாக பேட்டிற்கு சென்றது. இரண்டாவது இன்னிங்ஸ் பந்துவீசுவதற்கு சற்று சவாலாகவே இருந்தது. ஆகையால் முந்தைய இன்னிங்சை விட இன்னும் வேகமாக பந்துவீச வேண்டும் என முயற்சித்து அதற்கான திட்டத்தில் இறங்கினேன்.

இந்த மைதானத்தில் ரிவர்ஸ்-ஸ்பின் வீசினால் பேட்ஸ்மேன் இறங்கி அடிக்க முடியாது என தெரிந்து கொண்டு, அதற்கேற்றார் போல தொடர்ந்து வேகமாக வீசி வந்தேன். ரிஸ்ட்-ஸ்பின்னர்களுக்கு இது ஒரு கூடுதல் பலமாக இருக்கும். அவர்களால் எளிதாக ரிவர்ஸ்-ஸ்பின் வீச முடியும்.

காயத்திலிருந்து மீண்டு வந்த பிறகு எனக்கு நானே கொடுத்துக்கொண்ட தீவிர பயிற்சி மற்றும் சவால்களுக்கு கிடைத்த பரிசாக இதை நான் பார்க்கிறேன். இன்னும் ஆக்ரோசத்துடன் விளையாட வேண்டும் என்னும் முனைப்பிலும் இருக்கிறேன்.” என்றார்.