டி20 உலககோப்பைக்கு செல்லும் இந்திய அணியுடன் பறக்கும் 3 இளம் வீரர்கள் சேர்ப்பு!

0
7161

அக்டோபர் 6ம் தேதி ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணியுடன் மூன்று இளம் பந்துவீச்சாளர்கள் செல்கிறார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்திய அணி தற்போது தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்று வருகிறது. இரண்டு போட்டிகள் முடிவில் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரையும் ஏற்கனவே கைப்பற்றி விட்டது. மூன்றாவது போட்டி வருகிற அக்டோபர் 4 ஆம் தேதி இந்தூர் மைதானத்தில் நடைபெற உள்ளது.

- Advertisement -

இப்போட்டி முடிந்த பிறகு அக்டோபர் ஐந்தாம் தேதி மாலை மும்பையில் இருந்து ஆஸ்திரேலியாவிற்கு இந்திய அணி பயணிக்க உள்ளது. மெயின் அணியில் இடம்பெற்ற 15 பேர் மற்றும் ரிசர்வ் வரிசையில் இருக்கும் நான்கு வீரர்களில் ஷ்ரேயாஸ் தவிர மீதம் உள்ள மூன்று வீரர்கள் பயணிக்க உள்ளனர். தென்னாப்பிரிக்கா அணியுடன் நடக்கும் ஒருநாள் தொடரில் பங்கேற்கும் அவர், தொடரை முடித்துவிட்டு நேரடியாக ஆஸ்திரேலியா செல்கிறார்.

இவர்களுடன் மேலும் உம்ரான் மாலிக் மற்றும் சிராஜ் இருவரும் பயணிக்கின்றனர் என்ற தகவல் ஏற்கனவே வந்தது. தற்போது மேலும் 3 இளம் வேகப்பந்துவீச்சாளர்கள் ஆஸ்திரேலியா செல்லவிருக்கின்றனர் என தெரிய வந்துள்ளது. இவர்களை வலைப்பயிற்சிக்கு பயன்படுத்திக் கொள்ளவும். ஏதேனும் முன்னணி வேகப்பந்துவீச்சாளர்கள் காயம் அடைந்து விட்டால் ரிசர்வ் வரிசையில் வைத்துக் கொள்ளவும் இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அந்த மூன்று வீரர்கள் வரிசையில் ஐபிஎல் தொடரில் தொடர்ந்து 150 கிலோ மீட்டர்கள் வேகத்தில் பந்து வீசி வந்த மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் குல்தீப் சென் இருக்கிறார். உள்ளூர் டி20 போட்டிகளிலும் அசத்துகிறார். துவக்க ஓவர் மற்றும் டெத் ஓவர்களில் அபாரமாக பந்துவீசி வந்த டெல்லி கேப்பிட்டல் அணியைச் சேர்ந்த சேதன் சக்காரியா இடம்பெற்றுள்ளார். புதிதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்து அபாரமாக பந்தை ஸ்விங் செய்து திணரடித்த முகேஷ் சவுத்ரி இணைந்துள்ளார். இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் தென் ஆப்பிரிக்க அணியுடன் மூன்றாவது டி20 போட்டி முடிந்த பிறகு வெளியிடப்படும் என்று தெரிகிறது.

- Advertisement -