ஐபிஎல்

ராஜஸ்தான் அணியில் அவர் இருப்பது வெறும் ஸ்டைலுக்காக மட்டுமே.. வேறு எதையும் அவர் சாதித்தது கிடையாது – முன்னாள் இந்திய கேப்டன் தாக்கு

நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியில் ராஜஸ்தான் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக் குறித்து இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் சில முக்கிய விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.

நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணி அதிரடியாக விளையாடி 20 ஓர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 216 ரன்கள் குவித்தது. சன்ரைசர்ஸ் அணியில் அதிகபட்சமாக கேப்டன் இஷான் கிஷன் 44 பந்துகளில் 91 ரன்கள் குவித்தார். அதற்குப் பிறகு ராஜஸ்தான் அணி வெற்றி இலக்கை நோக்கி களம் இறங்கியது.

இதில் எதிர்பாராத விதமாக தொடக்க வீரர்களான வைபவ் சூர்யவன்சி டக் அவுட் ஆகியும் ஜெய்ஸ்வால் ஒரு ரன்னிலும் வெளியேறினார்கள். அதற்குப் பிறகும் இரண்டு விக்கட்டுகள் விரைவாக இழக்க கேப்டன் ரியான் பராக் இந்த முறையும் 4 ரன் மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்தார். இதனால் இறுதியில் ராஜஸ்தான் அணி 19 ஓவர்களில் 159 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தது.

- Advertisement -

இந்த நிலையில் இந்திய முன்னாள் கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், ராஜஸ்தான் கேப்டன் குறித்து சில விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார். இது குறித்து அவர் கூறும் போது ” அவர் ராஜஸ்தான் அணியில் இருப்பது வெறும் ஸ்டைலுக்காக மட்டுமே. வழக்கம் போலவே அவர் பேட்டிங்கில் எதையும் சாதிக்கவில்லை. போட்டிக்குப் பிறகு செய்தியாளர் சந்திப்பில் மட்டுமே பேசுவதற்கு அவர் இருக்கிறார். அவர் அந்த அணியில் இருப்பது வெறும் ஸ்டைலுக்காக தான் வேறு எதையும் சாதிப்பதற்காக இருக்கவில்லை.

இந்த போட்டியில் ஜடேஜாவுக்கு அவர் ஒரு ஓவர் கூட வீச வாய்ப்பளிக்கவில்லை. கேட்டால் எதிரணியில் ஒரு இடது கை ஆட்டக்காரர் விளையாடிக் கொண்டிருக்கிறார் என்று விளக்கம் அளிக்கிறார். இடது கை பந்துவீச்சாளர் ஒருவர் இடது கை பேட்ஸ்மேனுக்கு பவுலிங் செய்யக்கூடாது என்று விதி ஏதேனும் இருக்கிறதா? இது மிகவும் அபத்தமானது” என்று பேசி இருக்கிறார்.

- Advertisement -
Published by