கோலி? ரோகித்? யார் விக்கெட் வேல்யூ ஆனது? – கைய்ல் மேயர்ஸ் யோசிக்காமல் ஆன்சர்!

0
312
Mayers

இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. முதலில் நடைபெற்ற டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களை இந்திய அணி எதிர்பார்த்தபடி கைப்பற்றி இருக்கிறது!

ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்திருந்த நிலையில் நாளை இரண்டாவது போட்டி நடக்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது!

- Advertisement -

இந்த சுற்றுப்பயணத்தில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் டெஸ்ட் தொடரில் முழுமையாக பங்கேற்று விளையாடினார்கள். மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் போட்டியில் அணியில் இடம் பெற்றவர்கள் பரிசோதனை முயற்சிக்காக அடுத்த இரண்டு போட்டிகளிலும் அணியில் இடம் பெறவில்லை.

மேலும் தற்பொழுது நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியிலும் இவர்கள் இருவரும் இடம்பெறவில்லை. ஹர்திக் பாண்டியா கேப்டனாக தொடர்ந்து இருந்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது ஒரு ஆன்லைன் சேனல் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வெள்ளை பந்து துவக்க ஆட்டக்காரராக விளையாடும் கைய்ல் மேயர்ஸ் இடம் விராட் கோலி மற்றும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா குறித்து சில கேள்விகள் முன் வைத்தார்கள். அதற்கு அவரும் பதிலளித்திருக்கிறார்.

- Advertisement -

கைய்ல் மேயர் ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காக விளையாடுகிறார். மேலும் லக்னா அணிக்கு எதிரான போட்டியின் போது விராட் கோலி, நவீன் மற்றும் கம்பீருக்கு இடையே நடந்த வார்த்தை சண்டையில், இவரும் விராட் கோலி இடம் நடுவில் வாக்குவாதம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது இவரிடம் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரது விக்கெட்டில் யாருடைய மதிப்பு வாய்ந்தது என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதில் கைய்ல் மேயர்ஸ் ” ரோஹித் சர்மாவின் விக்கட்டை விட விராட் கோலியின் விக்கெட் மதிப்பு வாய்ந்ததாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். எந்த ஒரு பந்துவீச்சாளரும் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் விராட் கோலியின் விக்கெட்டை எடுக்க தான் நினைப்பார்கள்!” என்று கூறி இருக்கிறார்.

மேலும் விராட் கோலி ஆட்டத்தில் வெளிப்படுத்தும் ஆக்ரோஷம் தொடர்பான கேள்வி முன்வைக்கப்பட்டதற்கு பதில் அளித்த அவர் “அது அருமையான ஒன்று. நீங்கள் எதிரணியில் விளையாடும் வாய்ப்பை பெற்றிருக்க வேண்டும். அணிக்காக உங்களால் முடிந்த எல்லாவற்றையும் நீங்கள் செய்யலாம். தைரியமாக இருப்பது ஆக்ரோஷமாக இருப்பது உங்கள் அணியை முன்னேற்றி வெற்றி பெற வைப்பதற்கான உங்களின் விருப்பமாகவே வெளிப்படுகிறது!” என்று கூறியிருக்கிறார்!