இந்திய ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ்; புதிய ரோலில் கேஎல் ராகுல்!

0
360

வங்கதேச அணியுடன் நடைபெறும் முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்கிறது இந்திய அணி.

நியூசிலாந்து அணியுடன் டி20 மற்றும் ஒருநாள் தொடரை முடித்துவிட்டு வங்கதேசம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறது இந்திய அணி. நியூசிலாந்து தொடரில் ஓய்வில் இருந்த கேஎல் ராகுல், ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியுள்ளனர்.

- Advertisement -

இன்று நடைபெறும் முதல் ஒருநாள் போட்டி தாக்கா மைதானத்தில் நடக்க உள்ளது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் லிட்டன் தாஸ் முதலில் பந்து வீசுவதாக முடிவு செய்தார்.

பந்துவீச்சை தேர்வு செய்த பிறகு அவர் பேட்டி அளிக்கையில், “மைதானம் சற்று பிசுபிசுப்புடன் இருப்பதால் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்கிறேன். முதல் 10 ஓவர்கள் சற்று சிக்கலானதாக இருக்கும். ஆகையால் இன்றைய போட்டியில் மூன்று வேகப்பந்துவீச்சாளர்கள் இரண்டு சுழல் பந்துவீச்சாளர்களுடன் களம் இறங்குகிறோம். பத்து ஒர்களுக்குள் அதிக விக்கெட்டுகளை எடுப்பதற்கு பார்ப்போம். இந்திய அணி எங்களை எளிதாக கருத மாட்டோம் என்று கூறினார்கள். அதற்கு ஏற்றார் போல நாங்களும் சிறந்த கிரிக்கெட்டை வெளிப்படுத்துவோம்.” என்றார்.

அதைத்தொடர்ந்து பேட்டி அளித்த கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், “மைதானத்தில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் டாஸ் வென்று இருந்தால் நானும் பௌலிங் தேர்வு செய்திருப்பேன். அது நடக்கவில்லை. இன்றைய போட்டியில் நாங்கள் நான்கு ஆல்ரவுண்டர்களுடன் களமிறங்குகிறோம். குல்தீப் சென் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறார். அவரின் பந்துவீச்சை காண்பதற்கு ஆவலுடன் இருக்கிறேன். நியூசிலாந்து தொடரில் நல்ல கிரிக்கெட்டை வெளிப்படுத்தினோம். வானிலை சிக்கல்கள் இருந்தது. பங்களாதேஷ் மைதானம் மாறுபட்டது.

- Advertisement -

நியூசிலாந்து தொடரின் போது எனக்கு கிடைத்த ஓய்வு புத்துணர்வுடன் இருக்க உதவுகிறது. ஒரு நாள் போட்டிக்கான உலகக்கோப்பை இன்னும் நீண்ட நாட்கள் தள்ளி தான் இருக்கிறது. ஆகையால் ஒவ்வொரு தொடராகவும் கவனம் செலுத்தி வருவோம்.” என்றார்.

இன்றைய போட்டியில் களமிறங்கும் இந்திய அணி

ரோஹித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அகமது, ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர், முகமது சிராஜ், குல்தீப் சென்

இன்றைய போட்டியில் களமிறங்கும் பங்களாதேஷ் அணி

லிட்டன் தாஸ்(கேப்டன்), அனாமுல் ஹக், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, ஷகிப் அல் ஹசன், முஷ்பிகுர் ரஹீம்(கீப்பர்), மஹ்முதுல்லா, அபிஃப் ஹொசைன், மெஹிதி ஹசன் மிராஸ், ஹசன் மஹ்மூத், முஸ்தாபிசுர் ரஹ்மான், எபாடோட் ஹொசைன்