வீடியோ: சுவிங்கத்தை வாயில் வைத்திருந்த கேஎல் ராகுல் தேசிய கீதம் பாடியபோது என்ன செய்தார் தெரியுமா..? வீடியோ உள்ளே!

0
174

வாயில் சுவிங்கம் சாப்பிட்டுக் கொண்டிருந்த கே எல் ராகுல் தேசிய கீதம் பாடிய போது வாயிலிருந்து அதை கையில் எடுத்து வைத்துக்கொண்ட வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் பாராட்டுக்களை பெற்று வருகிறது.

ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியில் கடைசி நேரத்தில் கேஎல் ராகுல் சேர்க்கப்பட்டார். கேப்டன் ஆகவும் நியமிக்கப்பட்டு இருக்கிறார். ஐபிஎல் தொடர் முடிவுற்ற பிறகு கேஎல் ராகுல் காயம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டார். தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிரான தொடரில் அவரால் பங்கேற்க முடியாமல் போனது. மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் பங்கேற்க இருந்த அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் விலகினார்.

- Advertisement -

ஜிம்பாப்வே தொடரில் பங்கேற்க, துவக்கத்தில் கேஎல் ராகுல் பெயர் இடம் பெறவில்லை. கடைசி நேரத்தில் தனது உடல்தகுதியை அவர் நிரூபித்தார். இதன் காரணமாக வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் ஆசிய கோப்பைக்குச் செல்லும் இந்திய அணியிலும் கேஎல் ராகுல் இடம் பிடித்திருக்கிறார். ஆகஸ்ட் 18ஆம் தேதி ஹராரே மைதானத்தில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி துவங்கியது. இப்போட்டி துவங்கும் முன்பாக இந்திய வீரர்கள் அனைவரும் வரிசையில் நின்று தேசிய கீதம் இசைக்கப்படும் போது மரியாதை செலுத்தினர்.

தேசிய கீதம் துவங்குவதற்கு முன்பாக கேப்டன் கேஎல் ராகுல் வாயில் சுவிங்கம் வைத்திருந்தார். தேசிய கீதம் துவங்கிய தருணத்தில், தனது வாயிலிருந்த அதை கையில் எடுத்து வைத்துக்கொண்டு தேசிய கீதத்தை பாடத் துவங்கினார். இந்தியாவின் தேசிய கீதத்திற்கு ராகுல் உரிய மரியாதையை கொடுத்தார். இந்த சம்பவத்தின் வீடியோ பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பலரின் பாராட்டையும் பெற்று வருகிறது.

முதல் ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே அணி 10 விக்கெட்டுகள் இழப்பிற்கு 189 ரன்கள் அடித்திருந்தது. அதிகபட்சமாக தீபக் சகர், பிரசித் கிருஷ்ணா மற்றும் அக்சர் பட்டேல் ஆகிய மூவரும் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர். 190 ரன்கள் என்ற இலக்கை துரத்திய இந்திய அணிக்கு துவக்க வீரர் ஷிகர் தவான் 81 ரன்களும் சுப்மன் கில் 82 ரன்களும் அடித்து, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். 192 ரன்களை 31வது ஓவரில் அடித்த இந்திய அணி, 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

- Advertisement -

இப்போட்டியின் ஆட்டநாயக்கனாக வேகப்பந்துவீச்சாளர் தீபக் சகர் தேர்வு செய்யப்பட்டார்.