லக்னோ அணியின் கேப்டன் ஆகிறார் கே.எல்.ராகுல் ; ஏலத்திற்கு முன் வாங்கப் போகும் 3 வீரர்கள் அறிவிப்பு

0
426
KL Rahul Lucknow IPL Team

ஐ.பி.எல் 2022 தொடருக்கான ஏலம் வருகின்ற பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ளது. அதற்கு முன் பங்கேற்கும் அணிகள் அவர்கள் தக்கவைக்கும் வீரர்கள் பட்டியலை ஒப்பிடைக்க வேண்டும். இம்முறை புதிதாக களமிறங்கும் 2 அணிகள் தவிர மீதுமுள்ள 8 அணிகளும் அதை அறிவித்துவிட்டனர். விடுவிக்கப்பட்ட வீரர்களில் அதிகபட்சமாக 3 வீரர்களை ஏலத்திற்கு முன் புதிய 2 அணிகள் வாங்கிக்கொள்ளலாம்.

2022 முதல் 10 அணிகளைக் கொண்டு ஐ.பி.எல் தொடரை நடத்த பிசிசிஐ முடிவெடுத்து புதிய 2 அணிகளை வாங்க ஏலம் ஒன்றை நடத்தியது. சிவிசி கேப்பிட்டல்ஸ் எனும் நிர்வாகம் அகமதாபாத் அணியையும் கோயங்கா குரூப் லக்னோ அணியையும் வாங்கியுள்ளனர். கோயன்ங்கா என்பவர் இதற்கு முன் 2016 – 2017ல் ரைசிங் புனே சூப்பர்ஜெயண்ட்ஸ் எனும் அணியின் உரிமையாளராக இருந்தார். 2 ஆண்டு தடைக்குப் பிறகு மீனும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் திரும்பியதால் புனே மற்றும் குஜராத் அணிகள் வெளியேறின.

தற்போது 7090 கோடி செலவழித்து லக்னோ அணியை வாங்கியுள்ளார். ஏற்கனவே புனே அணிக்காக உபயோகப்படுத்திய சமூகவலைத்தள அக்கவுண்ட்டை பெயர் மாற்றியும்விட்டார். ஏலத்திற்கு முன் சிறப்பான மூன்று வீரர்களை தேர்வு செய்ய வேண்டுமென்பதில் தெளிவாக உள்ள அணி உரிமையாளர் பல நட்சத்திர வீரர்களிடம் ஒப்பந்தம் செய்ய அணுகினர். இறுதியில் பஞ்சாப் அணியின் கேப்டனாக செயல்பட்ட கே.எல்.ராகுல், ஆல்ரவுண்டர் மார்க்கஸ் ஸ்டோய்னிஸ் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னாய் ஆகியோரை வாங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கே.எல்.ராகுலே லக்னோ அணியையும் வழிநடத்த உள்ளார். மற்றொரு அணியான அகமதாபாத் ஹர்திக் பாண்டியா, ரஷீத் கான் மற்றும் இஷான் கிஷனை வாங்கியுள்ளதாகவும் கூறுகின்றனர். மேலும் ஹர்திக் பாண்டியா அவ்வணியின் கேப்டனாகவும் செயல்படவுள்ளார். இம்முறை ஐ.பி.எல் தொடர் & ஏலம் மிகவும் விறுவிறுப்பாக செல்லும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.