இங்கிலாந்து தொடரில் இருந்தும் முழுவதுமாக விலகிய கே.எல்.ராகுல் – சிகிச்சைக்காக வேறு நாட்டிற்கு செல்வதாக தகவல்

0
112
KL Rahul

ஐ.பி.எல் முடிந்து தெப்ஆப்பிரிக்க அணியோடு ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. தற்போது இந்தத் தொடரில் ரிஷாப் பண்ட்டின் தலைமையில் விளையாடி வரும் இந்திய அணி 1-2 என பின்தங்கி இருக்கிறது!

இந்தத் தொடருக்கு முதலில் கே.எல்.ராகுல் கேப்டனாக அறிவிக்கப்பட்டார். பின்பு அவருக்கு பயிற்சியில் இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயத்தால் தொடரிலிருந்து முழுமையாக வெளியேறினார். அடுத்து ரிஷாப் பண்ட்டை கேப்டனாக அறிவித்தது இந்திய கிரிக்கெட் வாரியம்.

- Advertisement -

தற்போது இங்கிலாந்தில் மூன்று வடிவ கிரிக்கெட் தொடரிலும் பங்கேற்க இந்திய அணி செல்கிறது. இதில் முதலில் ஜூலை 1ஆம் முதல் 5ஆம் தேதி வரை நடைபெறும் டெஸ்ட் போட்டியில் பங்கேற்கிறது. இதேசமயத்தில் ஜூன் 24, 26ஆம் தேதியில் இரண்டு டி20 போட்டிகளில் இந்திய அணி பங்கேற்கிறது. இந்த அணிக்கு ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக செயல்படுகிறார்.

இந்த டெஸ்ட் அணியில் இருந்தும் மொத்த இங்கிலாந்து தொடரிலிருந்தும் கே.எல்.ராகுல் விலகுவதாய் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு இடுப்பு பகுதியில் ஏற்பட்டுள்ள காயத்தால், அவர் ஜூன் கடைசி இல்லை ஜூலை முதல் வாரத்தில் சிகிச்சைக்காக ஜெர்மனி செல்ல இருக்கிறார் என்று கூறப்பட்டுள்ளது. தற்போது அவர் பெங்களூரில் நேசனல் கிரிக்கெட் அகாடமியின் கண்காணிப்பில் இருக்கிறார்.

இது குறித்துப் பேசியுள்ள இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா “கே.எல்.ராகுல் காயத்தின் சிகிச்சைக்காக ஜெர்மனி செல்வது சரியான முடிவுதான். அவரின் உடற்தகுதியில் இந்திய கிரிக்கெட் வாரியம் தொடர்ந்து கவனம் செலுத்தி செயல்பட்டு வருகிறது. அவர் இந்த மாத இறுதியில் இல்லை அடுத்த மாத தொடக்கத்தில் ஜெர்மனி செல்வார்” என்று கூறியுள்ளார். கடந்த ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் நான்கு டெஸ்ட் போட்டிகளில் லார்ட்ஸ் மைதானத்தில் ஒரு சதத்தோடு, 40 ரன் சராசரியில் மொத்தம் 315 ரன்களை கே.எல்.ராகுல் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது!

- Advertisement -

இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய டெஸ்ட் அணி வீரர்கள்:

ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஷ் ஐயர், ஹனுமா விகாரி, செதேஷ்வர் புஜாரா, ரிஷாப் பண்ட் (வி.கீ), கே.எஸ்.பரத் (வி.கீ), ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், சர்துல் தாகூர், மொகம்மத் ஷமி, ஜஸ்ப்ரீட் பும்ரா, மொகம்மத் சிராஜ், உமேஷ் யாதவ், பிரசித் கிருஷ்ணா.