டி20 தொடரிலிருந்து கேஎல் ராகுல் நீக்கம், பிசிசிஐ கூறிய அதிர்ச்சி காரணம்; மாற்று வீரர் அறிவிப்பு!!

0
67

கொரோனா தொற்று காரணமாக டி20 தொடரில் இருந்து விலகி இருக்கிறார் கே எல் ராகுல். அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சன் புதிய வீரராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை முடித்த பிறகு, 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. முதல் போட்டி ஜூலை 29ஆம் தேதி துவங்குகிறது. இதற்காக இந்திய வீரர்கள் இரு தினங்களுக்கு முன்பு மேற்கிந்திய தீவுகளுக்கு வந்திறங்கி பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 

- Advertisement -

ஒருநாள் மற்றும் டி20 தொடரில் கேஎல் ராகுல் இடம் பெற்றிருந்தார். திடீரென அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் ஒருநாள் தொடரில் இருந்து விலகினார். கொரோனா தொற்றில் இருந்து கடந்த வாரம் அவர் குணமடைந்துவிட்டதால் டி20 தொடரில் நிச்சயம் இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. டி20 தொடரில் பங்கேற்க இந்திய வீரர்கள் வந்து இறங்கியபோது அவர்களுடன் கே எல் ராகுல் இல்லை. அவருக்கு என்ன ஆயிற்று? ஏன் அவர் வரவில்லை? என பலரும் கேள்விகள் எழுப்பினர்.

இந்நிலையில் கொரோனா தொற்றிலிருந்து அவர் குணமடைந்துவிட்டாலும், பாதுகாப்பிற்க்காக மேலும் ஒரு வாரம் அவர் நிச்சயம் தனிமைப்படுத்துதலில் இருந்தாக வேண்டும் என பிசிசிஐ தரப்பு அறிவுறுத்தியதால் டி20 தொடரில் அவரால் பங்கேற்க முடியவில்லை. கேஎல் ராகுலுக்கு மாற்று வீரராக, ஒருநாள் தொடரில் இடம்பெற்றிருந்த சஞ்சு சாம்சன் அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

ஐபிஎல் தொடரில் லக்னொ அணிக்கு கேப்டனாக இருந்து வந்து கேஎல் ராகுல், காயம் ஏற்பட்டதால் ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு நேரடியாக ஜெர்மனி சென்று அறுவை சிகிச்சை மேற்கொண்டார். அதன் பிறகு இந்திய தேசிய அகடமியில் பயிற்சியிலும் ஈடுபட்டு வந்தார். முழுமையாக குணமடைந்ததால் இவருக்கு மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் வாய்ப்புகள் கொடுக்கப்பட்டது. துரதிஷ்டவசமாக திடீரென இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், இத்தொடரில் பங்கேற்க முடியாமல் போனது. தற்போது டி20 வாய்ப்பும் இல்லாமல் போயுள்ளது.

- Advertisement -

இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் டி20 உலக கோப்பைக்கு செல்லும் இந்திய அணியில் ராகுலின் பெயர் அடிபட்டு வருகிறது. இத்தருணத்தில் காயம் மற்றும் கொரோனா என அடுத்தடுத்து பாதிப்பிற்குள்ளாகி வரும் கேஎல் ராகுல் போதிய அளவிற்கு பயிற்சி ஈடுபடாதது அவருக்கு சற்று பின்னடைவை தரலாம்.