டி20 கிரிக்கெட்டில் விராட் கோலியின் சாதனையை உடைத்த குட்டி கோலி கே.எல்.ராகுல்

0
56
Virat Kohli and KL Rahul

2022 ஐ.பி.எல் பதினைந்தாவது சீசனின் 31வது போட்டி, நவிமும்பையின் டி.ஒய்.பாட்டில் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்றது. இந்தப்போட்டியில் பெங்களூர் ராயல் சேலன்ஞர்ஸ் அணியும், லக்னோ சூப்பல் ஜெய்ன்ட்ஸ் அணியும் மோதின.

முதலில் பேட் செய்த பெங்களூர் அணி கேப்டன் பாஃப்பின் 96 ரன்களால் 181 ரன்களை குவித்தது. பின்பு களமிறங்கிய லக்னோ அணி 8 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் மட்டுமே அடித்து, 18 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இதன் மூலம் புள்ளி பட்டியலில் பெங்களூர் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது. லக்னோ இரண்டாமிடத்தில் இருந்து நான்காம் இடத்திற்கு சறுக்கியது.

நேற்றைய ஆட்டத்தில் முப்பது ரன்களை அடித்த கே.எல்.ராகுல், இருபது ஓவர் போட்டிகளில் அதிசீக்கிரமாக 6000 ரன்களை அடித்த இந்தியர் என்ற சாதனையை விராட்கோலியோடு பகிர்ந்து கொண்டார். இந்தத் தொடரில் மும்பைக்கு எதிராக ராகுல் ஒரு சதம் அடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

உலக அளவில் 6000 ரன்களை குறைந்த ஆட்டங்களில் அடித்தவர்கள் பட்டியலில் கிறிஸ் கேல் [163] முதல் இடத்திலும், பாபர் ஆசம் [165] இரண்டாம் இடத்திலும் இருக்கிறார்கள். இந்தியர்களில் ராகுல், விராட்கோலிக்கு [184] அடுத்து ஷிகர் தவானும் [213], சுரேஷ் ரெய்னாவும் [217] இருக்கிறார்கள்!