இங்கிலாந்து மாதிரி எங்ககிட்டயும் அந்த ஆக்ரோஷம் இருக்கு, டெஸ்ட் போட்டில பாருங்க எப்படின்னு! – கேஎல் ராகுல் பேட்டி!

0
414

இங்கிலாந்து அணியை போல எங்களிடமும் அந்த ஆக்ரோஷத்தை பாருங்கள் என்று பேட்டியளித்திருக்கிறார் கேஎல் ராகுல்.

வங்கதேசம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. இதைத் தொடர்ந்து இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறுகிறது.

- Advertisement -

வருகிற டிசம்பர் 14ஆம் தேதி துவங்கும் முதல் டெஸ்ட் போட்டிக்காக இந்திய வீரர்கள் முழுமூச்சில் தயாராகி வருகின்றனர். இரண்டாவது ஒருநாள் போட்டியின்போது கட்டைவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக, கேப்டன் ரோகித் சர்மா மூன்றாவது ஒருநாள் போட்டியில் இருந்து வெளியேறினார்.

தற்போது முதல் டெஸ்ட் போட்டியிலும் ரோகித் சர்மா விளையாட முடியாது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரோகித் சர்மாவிற்கு மாற்று வீரராக இந்திய ஏ அணியின் கேப்டன் பொறுப்பில் விளையாடி வந்த அபிமன்யு ஈஸ்வரன் அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

அதைத்தொடர்ந்து முகமது சமி, ஜடேஜா ஆகியோரும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடவில்லை என்று தெரிய வந்திருக்கிறது. அவர்களுக்கு மாற்று வீரர்களாக சவுரப் குமார், நௌதீப் ஷைனி, ஜெயதேவ் உனட்கட் ஆகியோர் சேர்க்கப்பட்டிருக்கின்றனர் .

- Advertisement -

ரோகித் சர்மா இல்லாததால் கேஎல் ராகுல் கேப்டன் பொறுப்பேற்று விளையாட உள்ளார். முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்பாக பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட கேஎஎல் ராகுல் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார். அப்போது அவரிடம் ‘இங்கிலாந்து அணியின் ஆக்ரோஷமான அணுகுமுறை குறித்து உங்கள் கருத்து என்ன?’ என்று கேட்டபோது அவர் பதில் கூறியதாவது:

“பேஸ்பால் என்று அவர்கள் பெயர் வைத்திருக்கும் இந்த ஆக்ரோஷமான டெஸ்ட் கிரிக்கெட் அணுகுமுறையை நான் மிகவும் ரசிக்கிறேன். பயம் இன்றி எந்த ஒரு அணியையும் எதிர்கொள்ளும் இப்படிப்பட்ட அணுகுமுறை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. ஆஸ்திரேலியா-இங்கிலாந்து மைதானங்களில் இந்திய அணியும் இப்படி ஒரு ஆக்ரோஷமான அணுகுமுறையுடன் விளையாடி தொடரை கைப்பற்றியது. வங்கதேசம் அணியுடன் நடைபெறும் டெஸ்ட் தொடரிலும் இப்படி ஒரு அணுகுமுறையை இந்திய அணியிடமிருந்து நீங்கள் பார்ப்பீர்கள்.” என்றார்.