ரிஷப் பண்ட் அணியிலிருந்து திடீரென வெளியேற்றப்பட்டது எப்படி? – கேஎல் ராகுல் விளக்கம்!

0
779

ஒருநாள் தொடரிலிருந்து ரிஷப் பண்ட் வெளியேற்றப்பட்டது பற்றி பேட்டியில் பேசியுள்ளார் கேஎல் ராகுல்.

வங்கதேச அணியுடன் நடைபெறும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் ரிஷப் பண்ட் இடம்பெற்றிருந்தார். இவர் திடீரென ஒருநாள் தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார். “பிசிசிஐ மருத்துவ குழுவினரிடம் ஆலோசத்த பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது” என அணி நிர்வாகம் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

- Advertisement -

காயம் ஏற்பட்டுள்ளதா என்பதை பற்றி தற்போது வரை எதுவும் தெரிவிக்கப்படவில்லை. டிசம்பர் 14ஆம் தேதி துவங்கும் டெஸ்ட் போட்டிகளுக்குள் மீண்டும் இந்திய அணியில் இணைவார் ரிஷப் பண்ட் என்றும் கூறப்பட்டிருக்கிறது.

அதன் பிறகு நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி கடைசி வரை எடுத்துச் சென்று ஒரு விக்கெட் வித்தியாசத்தில் துரதிஷ்டவசமாக தோல்வியை தழுவியது. வங்கதேச அணிக்கு கடைசியில் வந்து ஹீரோவாக மாறிய மெகதி ஹாசன் ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.

இந்திய அணிக்கு ஒற்றை நம்பிக்கையாக இருந்தவர் கே எல் ராகுல். இவர் 73 ரன்கள் அடித்திருந்தார். போட்டியை இழந்த பிறகு பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஈடுபட்டிருந்த கே எல் ராகுலிடம் ரிஷப் பண்ட் வெளியேற்றப்பட்டது பற்றி கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தது. அதற்கு பதில் அளித்த அவர்,

- Advertisement -

“பயிற்சியை முடித்துவிட்டு டிரெஸ்ஸிங் ரூம் வரும் பொழுது ரிஷப் பன்ட் அங்கே இல்லை. அதை பற்றி நாங்கள் கேட்டபோது, அணி மருத்துவக் குழுவினரிடம் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு வெளியேற்றப்பட்டு இருக்கிறார் என எங்களுக்கு தெரியப்படுத்தினர். அதன்பிறகு தான் நானும் ப்ளெயிங் லெவனில் இருக்கிறேன் என புரிந்து கொண்டேன்.

ஐந்தாவதாக களம் இறக்கப்பட்டேன். அந்த இடத்தில் ஆடியது நம்பிக்கை அளிக்கும் விதமாக இருக்கிறது. மேலும் அணிக்காக ரன்களை அடித்ததும் கூடுதல் நம்பிக்கையை தருகிறது. அடுத்தடுத்த போட்டிகளில் என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம்.” என்றார்.