இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடர் – ராகுல் அதிரடி நீக்கம்

0
4615

இலங்கைக்கு எதிரான மூன்று டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி வரும் ஜனவரி மாதம் விளையாடுகிறது. முதல் டி20 வரும் மூன்றாம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த தொடருக்கான இந்திய அணியை பழைய தேர்வுக்குழுவுனரே அறிவிக்க உள்ளனர். இன்னும் புதிய தேர்வு குழு உறுப்பினர்கள் பி சி சி ஐ யால் நியமிக்கப்படவில்லை. வரும் டிசம்பர் 28ஆம் தேதியே புதிய உறுப்பினர்களுக்கான நேர்முகத் தேர்வு முடியும்.

இதனால் இலங்கை தொடருக்கு பழைய தேர்வுக்குழுவினரே அறிவிக்க உள்ளனர். இதற்காக சேத்தன்  சர்மா தலைமையான தேர்வு குழுவினர் விஜய் ஹசாரே கோப்பை உள்ள பல்வேறு தொடர்களை நேரடியாக கிரிக்கெட் மைதானத்திற்கு சென்று பார்த்து உள்ளனர்.இதில் டி20 போட்டிகளில் இருந்து கே எல் ராகுல் அதிரடியாக நீக்கப்படுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கே எல் ராகுல் தான் அடுத்த கேப்டன் என்று பிசிசிஐ அடையாளப்படுத்திய நிலையில், அவர் போட்டிகளில் தொடர்ந்து சொதப்பி வருகிறார் .

ரோகித் சர்மாவுக்கும் விரலில் காயம் குணமடையாததால் அவர் டி20 போட்டியில் விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. டி20 கிரிக்கெட் போட்டிக்கான தனி அணியை பிசிசிஐ உருவாக்க திட்டமிட்டுள்ளதால் விராட் கோலி போன்ற சீனியர்களுக்கு ஓய்வு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்திய டி20 அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட உள்ளார். இஷான் கிஷன் ,சஞ்சு சாம்சன், சூரியகுமார் யாதவ் ஆகியோர் டி20  இந்திய அணிக்கு திரும்புகின்றனர். வரும் ஜனவரி மாதத்தில் 28 நாட்களில் இந்திய அணி 12 கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கிறது.

இலங்கைக்கு எதிரான மூன்று டி20 மற்றும் 3 ஒரு நாள் தொடரும் இதனை தொடர்ந்து நியூசிலாந்துக்கு எதிரான மூன்று டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டியிலும் சொந்த மண்ணில் இந்திய அணி விளையாடுகிறது. இதனை தொடர்ந்து பிப்ரவரி மாதம் பெரும் எதிர்பார்க்கப்படும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்கு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் இந்தியா விளையாடுகிறது.  டெஸ்ட் போட்டிக்கு சீனியர்கள் தயாராக வேண்டிய நிலை உள்ளதால் ஒரு நாள் தொடரில் பல முன்னணி வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.