நம்பர்ஸ் வச்சு தப்பா எடை போட்றாதீங்க, ரொம்ப டேங்ஜர் பிளேயர் – இந்திய வீரருக்கு வாசிம் ஜாபர் ஆதரவு!

0
2838

நம்பர்ஸ் வைத்து இவரை குறைத்து எடை போட வேண்டாம் என்று கே எல் ராகுலுக்கு ஆதரவாக பேசியுள்ளார் வாசிம் ஜாபர்.

இந்திய டி20 அணியின் துணை கேப்டனாகவும் முன்னணி பேட்ஸ்மேன் ஆகவும் வலம் வருபவர் கே எல் ராகுல். இரண்டு முறை காயம் ஏற்பட்ட பிறகு அதில் இருந்து குணமடைந்து மீண்டும் இந்திய அணிக்கு திரும்பி இருக்கிறார். அதனால் தனது இயல்பான பார்மில் அவர் இல்லை என்று கூறலாம்.

- Advertisement -

உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றில் இந்திய அணி விளையாடிய இரண்டு போட்டிகளில் 4 மற்றும் 9 ரன்கள் முறையே பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு எதிராக அடித்த இவர், சொற்பரன்களில் ஆட்டம் இழந்ததால் இந்திய அணிக்கு சிறப்பான துவக்கம் கிடைக்கவில்லை.

இந்த விமர்சனத்தை பல்வேறு விமர்சனர்களும் சமூக வலைதளங்களில் இந்திய அணிகளின் ரசிகர்களும் தொடர்ந்து வைத்த வண்ணம் இருக்கின்றனர். கேஎல் ராகுல் நல்ல பேட்டிங் நிலைக்கு திரும்ப வேண்டும் என்றால் அவருக்கு மிடில் ஆர்டரில் விளையாடவைக்க வேண்டும். துவக்க வீரராக சூரியகுமார் யாதவ் அல்லது ரிஷப் பண்ட் இருவரில் ஒருவரை விளையாட வைக்கும் படியும் சிலர் அறிவுரைகளை கூறி வருகின்றனர்.

இவை ஒருபுறம் இருக்க கேல் ராகுலுக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்கும் வண்ணம் புள்ளி விவரங்களுடன் பேசியிருக்கிறார் இந்திய அணியின் முன்னாள் துவக்க வீரர் வாசிம் ஜாஃபர். அவர் கூறுகையில்,

- Advertisement -

“தற்போது நம்பர்ஸ் வைத்து கே எல் ராகுலை விமர்சித்து வருகிறார்கள். ஆனால் அதையும் தாண்டி அவர் மிகச் சிறந்த வீரர். கடந்த முறை இந்திய அணி ஆஸ்திரேலியா வந்த போது அவர் எத்தகைய பார்மில் இருந்தார் என்பது பலருக்கும் தெரியும். அதன் பிறகு காயம் ஏற்பட்டது. அந்த காயத்தில் இருந்து குணமடைந்து வந்த சில வாரங்களிலேயே மீண்டும் காயம் அடைந்துவிட்டார்.

ஆகையால் மீண்டும் அவரது இயல்பான பேட்டிங் நிலைக்கு வருவதற்கு சற்று கடினமாக இருக்கிறது. காயம் தான் அவருக்கு மிகப்பெரிய பின்னடைவை தந்திருக்கிறது. அதனால் அவரது பேட்டிங்கில் ரன்கள் வரவில்லை. இந்த நம்பரை வைத்துக்கொண்டு பலரும் விமர்சிக்கிறார்கள்.

கண்டிப்பாக சர்வதேச கிரிக்கெட் போட்டியில் நம்பர்கள் தான் பேசும். ஆனால் அதையும் தாண்டி அவர் எத்தகைய திறமையான வீரர் என்பதை புரிந்து கொண்டு, இன்னும் சில நாட்கள் கொடுக்க வேண்டும். வரும் போட்டிகளில் நிச்சயம் அபாரமாக விளையாடுவார். வேகப்பந்துவீச்சை மிகச் சிறப்பாக எதிர்கொள்வார் என்பதை ஆஸ்திரேலிய மைதானத்தில் நாம் பார்க்கத்தான் போகிறோம்.” என்று ஆதரவளித்தார்.