வீடியோ: கே எல் ராகுல் செய்த தவறால் போட்டியை இழந்த இந்திய அணி – ரோஹித் சர்மா கோபம்

0
687

கடைசி விக்கெட்டுக்கு ஜோடியாக 51 ரண்களை சேர்த்து வங்கதேசத்தின் ஆல்ரவுண்டர் மெஹதி ஹசன் மற்றும் முஸ்தபிஸர் ரகுமான் ஆகியோர் இந்தியாவுக்கு எதிரான முதல் போட்டியில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் தங்களது அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர் . பரபரப்பான இந்த போட்டியில் வங்கதேச அணி ஒன்பது விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்தபோது தனது சிறப்பான பேட்டிங் வெளிப்படுத்தி அணியை வெற்றியின் பாதைக்கு அழைத்துச் சென்றார் மெஹதி ஹசன்.

இந்திய வங்கதேச அணிகளுக்கு எதிரான மூன்று போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடர் இன்று டாக்காவில் தொடங்கியது இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 186 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது கே எல் ராகுல் மட்டும் சிறப்பாக விளையாடி 73 ரங்களை சேர்த்திருந்தார் , பங்களாதேஷ் அணியின் ஆல் ரவுண்டர் ஷகீப் அல் ஹசன் சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட் வீழ்த்தினார் .

- Advertisement -

இதனைத் தொடர்ந்து 187 ரன்களை வெட்டி இலக்காக கொண்டு ஆடிய வங்கதேச அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது . இந்திய அணியின் தரப்பில் வாஷிங்டன் சுந்தர் மற்றும் குல்தீப் சென் இரண்டு விக்கெட்டுகளையும் தீபக் சகார் மற்றும் தாக்கூர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார் . சிறப்பாக பந்து வீசிய முகமது சிராஜ் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார் .

இதனால் எளிதாக பங்களாதேஷ் அணி வெற்றி பெரும் என்ற நிலையிலிருந்து 135 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் விளிம்பில் நின்று கொண்டிருந்தது . அந்த நேரத்தில் மெஹதி ஹஸன் மற்றும் முஸ்தபிஷர் ரகுமான் இருவரும் ஜோடி சேர்ந்து ஆடிக் கொண்டிருந்தனர் . இந்திய அணி ஒரு விக்கெட் வீழ்த்தினால் வெற்றி என்று நிலையில் ஆட்டத்தின் 43 வது ஓவரில் சர்துல் தாக்கூர் வீசிய பந்தினை மெகதி ஹசன் சிக்ஸர் அடிக்க முயன்ற போது அந்தப் பந்து பேட்டின் டாப் எட்ஜில் பட்டு உயரத்தில் சென்றது .

அந்த வாய்ப்பை பிடிக்க இந்திய அணியின் துணை கேப்டனும் விக்கெட் காப்பாளருமான கே எல் ராகுல் துரத்தி சென்றார் . அவரிடம் கிளவுஸ் இருப்பதால் அவர் எளிதாக கேட்ச் பிடித்து விடுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர் . ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக அந்த வாய்ப்பினை அவர் தவற விட்டார் . அந்த கேட்சை மட்டும் பிடித்திருந்தால் இந்திய அணி எளிதாக வெற்றி பெற்று இருக்கும் . வாய்ப்பானது தவிற விடப்பட்டதால் அதன் பின்பு அதிரடியாக ஆடிய பங்களாதேஷ் அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது .

- Advertisement -

போட்டிக்கு பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் தனது அதிருப்தியை வெளிப்படுத்திய கேப்டன் ரோகித் சர்மா இதேபோன்று போட்டிகளில் இருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் . கடினமான சூழ்நிலைகளை எவ்வாறு கையாளுவது என்று யாரும் யாருக்கும் சொல்லித் தர முடியாது அதனை நாம் போட்டிகளில் இருந்து அனுபவத்தின் மூலமாகத்தான் கற்றுக் கொள்ள வேண்டும் நமது வீரர்களும் அப்படி கற்றுக் கொள்வார்கள் என்று நம்புகிறேன் . கடைசி நேரத்தில் நாம் சில வாய்ப்புகளை தவற விட்டதும் தோல்விக்கு காரணமாக அமைந்தது என்று கூறினார் . இரண்டாவது போட்டியில் முதல் போட்டியின் தவறுகளை திருத்திக் கொண்டு நம்பிக்கையுடன் ஆடி
வெற்றி பெறுவோம் என்று தெரிவித்தார் .