முதல் டெஸ்டில் சூரியகுமார் யாதவிற்கு இடம் உறுதி; ஷுப்மன் கில் இல்லை – வெளியான தகவல்!

0
5210

முதல் டெஸ்ட் போட்டியில் ஷுப்மன் கில் இல்லை, சூரியகுமார் யாதவ் இருக்கிறார் என்கிற தகவல்கள் வெளியாகி உள்ளது.

பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் என்று அழைக்கப்படும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடக்க உள்ள நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நாக்பூர் மைதானத்தில் ஒன்பதாம் தேதி நடக்கிறது.

- Advertisement -

இந்திய துணை கண்டம் சுழல் பந்துவீச்சிற்கு சாதகமாக இருக்கும் என்பதால், இந்திய அணியின் சுழல் பந்துவீச்சாளர்களை சமாளிப்பதற்கு ஆஸ்திரேலியா அணியும் ஆஸ்திரேலியா அணியின் சுழல் பந்துவீச்சாளர்களை சமாளிப்பதற்கு இந்திய அணியும் மாறி மாறி திட்டங்களை வகுத்து பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரில் ரிஷப் பன்ட் இல்லாதது சற்று பின்னடைவாக இருக்கின்றது. அவரைப் போன்று மிடில் ஆர்டரில் அதிரடியாக தாக்கத்தை ஏற்படுத்தி விளையாடக்கூடிய வீரர் எவ்வளவு முக்கியம் என்பதை கடந்த இரண்டு பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் நம்மால் பார்க்க முடிந்தது. இம்முறை அவருக்கு பதிலாக சூரியகுமார் யாதவ் மற்றும் கிஷான் கிஷன் இரண்டு பேரும் உள்ளே எடுத்துவரப்பட்டிருக்கின்றனர்.

சூரியகுமார் யாதவ் உள்ளூர் டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய நிறைய அனுபவம் பெற்றவர். இஷான் கிஷன் போதிய அனுபவம் பெறாதவர். ஒரு சில ரஞ்சிக்கோப்பை போட்டிகள் மட்டுமே விளையாடி இருக்கிறார்.

- Advertisement -

அதே நேரம் இஷான் கிஷன் ஸ்பின்னர்களை எதிர்கொள்வதற்கு திணறியுள்ளார். ஆனால் சூரியகுமார் யாதவ் ஸ்பின்னர்களை எதிர்கொள்வதில் கைதேர்ந்தவர். ஸ்வீப் ஷாட், ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட் என்று இரண்டையும் நேர்த்தியாக விளையாட கூடியவர்.

இவர்கள் இருவரில் சூரியகுமார் யாதவ் பிளேயிங் லெவனில் இருக்க வேண்டும். பரத் உள்ளே வந்து கீப்பராக செயல்பட வேண்டும் என்று தொடர்ந்து கருத்துக்கள் நிலவி வந்தன.

இந்நிலையில் பிப்ரவரி 8ஆம் தேதி வெளியான தகவலின்படி, பிளேயிங் லெவனில் சூரியகுமார் யாதவ் இருக்கிறார். இஷான் கிஷன் வெளியில் அமர்த்தப்பட உள்ளார் மற்றும் பரத் கீப்பராக எடுத்துவரப்படுகிறார் என்கிற தகவல்கள் வந்திருக்கிறது. மேலும் கேஎல் ராகுல் துவக்க வீரராக களம் இறங்க உள்ளார். ஷுப்மன் கில் பிளேயிங் லெவனில் இல்லை என்றும் கூறப்படுகிறது