“தோனி, கோலி, ரோகித்.. யாரை மாதிரி உங்க கேப்டன்ஷிப் இருக்கும்” – நிரூபரின் கேள்விக்கு கோபமடைந்த கேஎல் ராகுல்!

0
345

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு முன்னர் நடத்தப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்பில் கேஎல் ராகுல் சற்று கோபமாக பதில் அளித்திருக்கிறார்.

ஐபிஎல் தொடர் முடிவுற்ற பிறகு காயம் காரணமாக ஜெர்மனி சென்று கேல் ராகுல் அறுவை சிகிச்சை மேற்கொண்டார். அதன் பிறகு தொடர்ந்து தீவிர சிகிச்சையிலும் இருந்து வந்தார். மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் அவரது உடல்தகுதி நிரூபிக்கப்பட்டு மீண்டும் இந்திய அணிக்குள் நுழைவதாக இருந்தது. திடீரென ஏற்பட்ட கொரோனா தொற்று காரணமாக அவரால் பங்கேற்க முடியாமல் போனது.

- Advertisement -

இந்நிலையில் ஆசிய கோப்பைக்குச் செல்லும் இந்திய அணியில் கேஎல் ராகுலுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதற்கு முன்பாக ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடர் நடத்தப்பட உள்ளது. இதில் கேஎல் ராகுல் பங்கேற்பாரா? மாட்டாரா? என கேள்விகள் எழுந்து வந்த நிலையில் கடைசி நேரத்தில் தனது உடற்பகுதியை நிரூபித்து இந்திய அணிக்குள் இடம்பெற்றார். மேலும் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்திய அணிக்குள் வந்த அவர் கூடுதலாக கேப்டன் பொறுப்பையும் ஏற்று விளையாட வேண்டும் என்பது சற்று கடினமான ஒன்றாக தான் இருக்கும். இதற்கு முன்னர் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் கேஎல் ராகுல் கேப்டன் பொறுப்பை வகித்ததே முதல் முறையாகும். கேப்டன் பொறுப்பில் போதிய அனுபவம் இல்லாத கேஎல் ராகுலுக்கு மிகப்பெரிய சவால் காத்திருக்கிறது. ஏனெனில் இவருக்கு முன்பாக எம் எஸ் தோனி, விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா என பல முன்னணி வீரர்கள் கேப்டன் பொறுப்பில் இருந்து வந்தனர். அவர்கள் இடத்தை நிரப்புவது என்பது எளிதல்ல. ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடர் துவங்குவதற்கு முன்பாக பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் ஈடுபட்டார்.

கே எல் ராகுல் அப்போது எழுப்பப்பட்ட கேள்விக்கு திடீரென சற்று கோபமாக அவர் பதில் அளித்தது பேசுபொருள் ஆகியுள்ளது. தோனி, விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இவர்களில் யாரை போன்று உங்கள் கேப்டன் பொறுப்பு இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், “மைதானத்திற்கு சென்று நான் ஏன் மற்றவர்கள் போல இருக்க வேண்டும். நான் என்னைப் போலவே செயல்பட விரும்புவேன். வீரர்களுக்கு போதிய சுதந்திரத்தையும் கொடுத்து விளையாட வைப்பேன். நான் மற்றவர்களைப் போன்று செய்தால் எனக்கென தனி அடையாளம் இருக்கிறது.” என்றார்.

- Advertisement -

“நீங்கள் சொன்ன பெயர்கள் எல்லாம் தங்களது கிரிக்கெட் வாழ்க்கையில் நிறைய சாதித்தவர்கள். அவர்களிடம் இருந்து நான் நிறைய எடுத்துக் கொள்ள வேண்டியது இருக்கிறது. அதற்காக அவர்களை அப்படியே பின்பற்ற வேண்டியது இல்லை. நான் அந்த மூன்று பேரின் கேப்டன் பொறுப்பிலும் விளையாடி இருக்கிறேன். எவ்வாறு அவர்கள் கேப்டன்ஷிப் செய்வார்கள் என்று எனக்கு நன்றாக தெரியும். ஆகையால் அவர்களிடம் இருந்து எடுத்துக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறதே தவிர, அதே பாணியை நானும் செய்ய வேண்டும் என்று இல்லை.” என கூறினார்.