சமூக வலைதளத்தில் தோனியை அசிங்கப்படுத்தும் வகையில் பதிவிட்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிர்வாகம் ; கடும் கோபத்தில் உள்ள தோனி ரசிகர்கள்

0
681
KKR Field Setup for MS Dhoni

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி இன்று நடைபெற்று முடிந்தது. கடைசி நாள் ஆட்டம் இன்று இங்கிலாந்து அணி ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்த இலக்கை நோக்கி சேஸ் செய்து கொண்டிருந்தது. ஒருகட்டத்தில் கடைசி 10 ஓவர்கள் மட்டுமே ஆட்டத்திலிருந்த நிலையில், ஆஸ்திரேலிய அணியின் அனைத்து வீரர்களும் பிட்ச்சை சூழ்ந்து ஸ்லிப், கல்லி, கவர், ஷார்ட் கவர், மிட் ஆன் மற்றும் மிட் ஆஃப் என சுற்றிவளைத்து நெருக்கடி கொடுத்தனர்.

இருப்பினும் இறுதியில் இங்கிலாந்து அணி 9 விக்கெட் மட்டுமே இழந்து போட்டியை சமன் செய்து தோல்வியின் விளிம்பில் இருந்து தப்பித்தது. ஆஸ்திரேலிய அணி வீரர்கள் அனைவரும் அவ்வாறு நின்று ஃபீல்டிங் செய்த புகைப்படம் சமூக வலைதளத்தில் மிகப்பெரிய அளவில் வைரலானது.

- Advertisement -

எம்.எஸ்.தோனியை கலாய்த்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி

2016ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில் ரைஸ் இந்த புனே சூப்பர் ஜெயின்ட்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது. அந்தப் போட்டியில் முதலில் புனே அணி பேட்டிங் விளையாடியது. அந்த ஆட்டத்தில் புனே அணி வீரர்கள் அனைவரும் வந்த வேகத்தில் அவுட்டாகி சென்றனர்.

அதன் காரணமாக அந்த அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி இறுதி வரை நிதானமாக நின்று விளையாட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார். நெருக்கடியான சூழ்நிலையில் பேட்டிங் விளையாட வந்த அவரை மேலும் நெருக்கடிக்கு ஆளாக்க ஸ்லிப், சில்லி பாய்ண்ட், ஷார்ட் ஸ்கொயர் என நான்கு வீரர்கள் அவரை சுற்றிவளைத்து ஃபீல்டிங் செய்தனர். மகேந்திர சிங் தோனிக்கு எதிராக அவர்கள் அவ்வாறு ஃபீல்டிங் செய்த புகைப்படம் மிகப்பெரிய அளவில் வைரல் ஆனதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது அந்தப் புகைப்படத்தை இன்று ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக ஃபீல்டிங் செய்த புகைப்படத்துடன் இணைத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அந்த பதிவில், “ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக இன்று ஃபீல்டிங் செய்த தருணம், டி20 போட்டியில் மிகவும் சாமர்த்தியமாக ஒரு சமயத்தில் ஃபீல்டிங் செய்த ( எம்எஸ் தோனிக்கு எதிராக ) தருணத்தை நினைவு படுத்துவது போல் உள்ளது” என்று நக்கல் துணியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி குறிப்பிட்டு கூறியுள்ளது.

- Advertisement -

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இவ்வாறு செய்தது மிகப் பெரிய தவறு என்றும், எதற்காக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இவ்வாறு நடந்து கொள்கிறது என்றும் அதனுடைய ரசிகர்கள் அந்த பதிவுக்கு கீழ் கமெண்ட் செய்து வருகின்றனர். ஒரு சில ரசிகர்கள் இன்னும் ஒரு படி மேல் போய் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை திட்டித் தீர்த்துக் கொண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது