கம்பீர் செய்த முட்டாள் தனம்! கேகேஆர் அணியில் இருக்கும் பெரிய ஓட்டை.. முன்னாள் வீரர் கிண்டல்

0
749

ஐபிஎல் மினி ஏலத்தில் கொல்கத்தா அணி ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க்கை 24 கோடியே 75 லட்சம் ரூபாய் செலவு செய்து வாங்கியது. இந்த நிலையில் கொல்கத்தா அணியில் மிகப்பெரிய ஓட்டை ஒன்று இருப்பதை அந்த அணி நிர்வாகம் யோசிக்கவில்லை என்று முன்னால் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், கே எஸ் பரத்தை 50 லட்சம் ரூபாய்க்கும் மனிஷ் பாண்டேவை 50 லட்சம் ரூபாய்க்கும் கொடுத்து கடைசியாக தான் மினி ஏலத்தில் கொல்கத்தா அணி வாங்கியது. தற்போது கே எஸ் பாரத்தை உங்களுடைய கூடுதல் விக்கெட் கீப்பராக தான் பயன்படுத்த முடியும்.

- Advertisement -

ஏனென்றால் பிளேயிங் லெவனில் குர்பாசை நீங்கள் விக்கெட் கீப்பராக பயன்படுத்தலாம். அவரும் இல்லையென்றால் ஜேசன் ராயை நீங்கள் பயன்படுத்த வேண்டும். அப்படி இருக்கும் பட்சத்தில் நீங்கள் கே எஸ் பரத்தை நடு வரிசையில் பயன்படுத்தினால் அது சரியாக வராது.

தற்போது பரத் அல்லது மனிஷ் பாண்டே என இரண்டு வீரர்களுமே நடுவரசையில் இருப்பது அவர்களுக்கு ஏற்ற இடம் கிடையாது. தற்போது ரஹமுல்லா குரூபாஸ்,ஜேசன் ராய், வெங்கடேஷ் ஐயர்,ஸ்ரேயாஸ் ஐயர், நித்திஷ் ரானா,ரிங்கு சிங், ஆண்ட்ரூ ரசல் அல்லது ரூதர்போர்ட் போன்ற வீரர்களை கொல்கத்தா அணி பயன்படுத்தும் என்று குறிப்பிட்டுள்ள ஆகாஷ் சோப்ரா.

முஜிபுர் ரஹ்மானை கொல்கத்தா அணி சேர்த்து தங்களுடைய பந்துவீச்சு பலத்தை அதிகரித்து இருக்கிறது. எனினும் பிளேயிங் லெவனில் ஏற்கனவே சுனில் நரேன்,வருண் சக்கரவர்த்தி, சுயேஷ் சர்மா,அங்குல் ராய் போன்ற வீரர்கள் தான் முன்னுரிமை வழங்கப்படும். இதனால் முஜிபுர் ரஹ்மானுக்கும் இடம் இருக்காது.

- Advertisement -

இதேபோன்று கே கே ஆர் அணி தங்களுடைய நான்கு வெளிநாட்டு வீரர்களை தேர்வு செய்வதை சவாலாக இருக்கும்.ம ஸ்டார்க் 24 கோடியே 75 லட்சம் ரூபாய் கொடுத்து எடுத்திருக்கிறார்கள். அதாவது தங்களுடைய மொத்த பணத்தில் 75 சதவீதத்தை ஒரு வீரர்க்கே பயன்படுத்தி விட்டார்கள்.

இதனால் அவரை கண்டிப்பாக பிளேயிங் லெவனில் சேர்க்க வேண்டும். தொடக்க வீரராக ஜேசன் ராய் அல்லது குர்பாஸ் இருக்க வேண்டும். ஃபினிஷர் ரோலில் ஆண்டிரூ ரஸில் இருப்பார். நான்காவது வீரராக சுனில் நரைன்  இருப்பார். இப்படி இருந்தால் கொல்கத்தா அணி மனிஷ் பாண்டே மற்றும் கேஸ் பரத்தை தான் நடு வரிசையில் நம்பி இருக்க வேண்டிய சூழலில் இருப்பதாக ஆகாஷ் சோப்ராக் கூறியுள்ளார்.