ஆட்டத்தின் முக்கியமான 19வது ஓவரை வெங்கடேசிடம் ஏன் கொடுத்தேன் ? கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் விளக்கம்

0
1116
Venkatesh Iyer and Shreyas Iyer

2022 ஐ.பி.எல் சீசனில் இதுவரை நடந்த போட்டிகளிலிருந்து, லக்னோ அணிக்காக விளையாடும் பதோனி என்ற இளம் இந்திய வீரரின் திறமை வெளிப்பட்டிருக்கிறது. இப்படி ஒவ்வொரு ஐ.பி.எல் சீசன்களிலும் தங்களின் திறமைகளை எப்படியாவது வெளிப்படுத்திட இளம் வீரர்கள் உழைப்பது நடக்கும். புது திறமைகள் வெளியே வந்தால், இரசிகர்கள் அணி வித்தியாசம் பார்க்காமல் ஆதரிப்பதும் நடக்கும்.

ஆனால் இந்த ஐ.பி.எல் சீசனில் பழைய வீரர்கள் தங்களின் ஆட்டத்திறமை அல்லாது கேப்டன்சி திறமையைக் காட்டும் போட்டியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் சென்னை அணியின் ஜடேஜா தவிர்த்து K.L.ராகுல், ஸ்ரேயாஷ், ரிஷாப் என மூவர்களுக்குள்ளும் நடக்கும் கேப்டன்சி போட்டி முக்கியமானது. ஏனென்றால் இதிலிருந்துதான் எதிர்கால இந்திய அணிக்கான கேப்டன் தேர்வும் அமையும்!

- Advertisement -

நேற்றைய பெங்களூர் கொல்கத்தா அணிகளுக்கிடையே நடந்த போட்டியில், கொல்கத்தா 128 என்ற குறைந்த ரன்களுக்கு ஆட்டமிழந்திருந்தாலும், இரண்டாவது பந்து வீசும்போது வரும் பனிப்பொழிவின் சிரமங்களைத் தாண்டியும், மிகச்சிறப்பாகப் பந்துவீசி, பெங்களூர் அணிக்கு கடும் போட்டியளித்து, இறுதி ஓவரில்தான் வெற்றிபெற விட்டனர். இதில் ஒருகட்டத்தில் கொல்கத்தா அணி வெல்லவும் ஒரு சிறு வாய்ப்பு உருவானது குறிப்பிடத்தக்கது. கொல்கத்தா அணியின் இந்த மனம் தளாராத கடுமையான போராட்டத்திற்கு ஸ்ரேயாஷின் கேப்டன்சியும் முக்கியக் காரணம்!

தோல்விக்குப் பிறகு ஆட்டம் குறித்து பேசி ஸ்ரேயாஷ், “இந்த ஆட்டம் எனக்கும் மிகவும் உற்சாகமாக இருந்தது. பந்துவீச மைதானத்திற்குள் செல்லும் முன், நான் எனது வீரர்களுடன் பேசும் பொழுது, இந்த ஆட்டம் நமது குணத்தையும் அணுகுமுறையையும் வரையறுக்கப் போகிறது என்றும், களத்தில் நாம் போராடுவது அடுத்த சில ஆட்டங்களுக்கு நமது மனநிலையைப் பிரதிபலிக்க போகிறதென்றும் சொன்னேன். இறுதி ஓவர் வரை ஆட்டத்தைக் கொண்டு சென்று போராடியது நன்றாக இருந்தது. அதே சமயத்தில் இது கடினமான ஒன்று. ஆட்டத்தின் ஆரம்பத்தில் எங்களது சிறந்த பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தி அவர்கள் விக்கெட்டை வீழ்த்த நினைத்தேன். ஆனால் அது சரியாகப் போகவில்லை. நடுவில் அவர்கள் நன்றாக ஆடினார்கள். அவர்களுக்கு என் பாராட்டுகள்” என்று
தெரிவித்தார்.

மேலும் 19வது ஓவரை வெங்கடேசிடம் கொடுத்ததுப் பற்றிக் கூறிய ஸ்ரேயாஷ், “வெங்கடேஷ் சர்வதேச அளவில் பந்துவீசிய அனுபவம் உடையவர். மேலும் தொடரின் ஆரம்பத்தில் அவர்கள் நம்பிக்கையைப் பெறுவது முக்கியம். அதற்கு நாம் அவர்களை ஆதரிக்க வேண்டும். இது அப்படி நம்பிக்கையைப் பெறுவதற்கான ஆட்டம்” என்றார்!

- Advertisement -