இன்னமும் எனக்கு நினைவில் இருக்கிறது – பொல்லார்டு செய்த மோசமான சம்பவத்தை நினைவு கூர்ந்த எவின் லீவிஸ்

0
1017
Kieron Pollard and Evin Lewis

மேற்கிந்திய தீவுகளில் கரீபியன் பிரீமியர் லீக் என்ற தொடர் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டு வருகிறது. கெயில், பொல்லார்டு, டூப்ளெசிஸ், போன்ற முன்னணி வீரர்கள் விளையாடுவதால் இந்தத் தொடர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் திரில்லிங்கான ஆட்டங்கள் தினந்தோறும் அரங்கேறுவதால் ரசிகர்கள் மத்தியில் இதற்கு தனி செல்வாக்கு கிடைத்துள்ளது. இந்த தொடரின் நேற்றைய ஆட்டத்தில் நைட் ரைடர்ஸ் மற்றும் பேட்ரியாட்ஸ் அணிகள் மோதின.

முதலில் பேட்டிங் செய்த நைட் ரைடர்ஸ் அணி 159 ரன்கள் எடுத்தது. அதன் பின்பு அடைய பேட்ரியாட்ஸ் அணிக்கு கெயில் மற்றும் லீவிஸ் துவக்கம் கொடுத்தனர். நைட் ரைடர்ஸ் அணியின் பந்துவீச்சை எளிதாக சமாளித்து இந்த இணை பவர்ப்ளே முடிவதற்கு உள்ளேயே 67 ரன்கள் எடுத்தது. குறிப்பாக அணியின் துவக்க வீரர் ஆன எவின் லீவிஸ் சிறப்பாக விளையாடி அசத்தினார். 5 பவுண்டரிகள் மற்றும் 11 சிக்சர்களுடன் 52 பந்துகளில் 102 ரன்கள் எடுத்தார் லீவிஸ். இதன் காரணமாக பேட்ரியாட்ஸ் அணி 32 பந்துகள் மீதம் இருந்த நிலையிலேயே 160 ரன்கள் என்ற இலக்கை எட்டிப் பிடித்தது.

- Advertisement -

ஆட்டம் முடிந்த பின்பு பேசிய லீவிஸ் 2017 ஆம் ஆண்டு பொல்லார்டு செய்தது இன்னமும் நினைவில் இருக்கிறது என்று கூறினார். கடந்த 2011 ஆம் ஆண்டு நடந்த ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற ஒரு ரன்கள் தேவை என்ற நிலையில் பொல்லார்ட் ஒரு நோபால் வீசினார். இதனால் 97 ரன்களில் இருந்த லீவிஸால் சதம் கடக்க இயலவில்லை.

இதற்கு பலி தீர்க்கும் வண்ணமாக நேற்றைய ஆட்டத்தில் சதம் கடந்தார் லீவிஸ். அதிலும் பொலார்ட் பந்துவீச்சில் 2 சிக்சர்களை சிறப்பாக அடித்து தனது அணியை வெற்றிபெற வைத்தார். இது சதத்திற்காக தான் மிகவும் கடினப்பட்டு உடைத்ததாக லீவிஸ் கூறினார். மேலும் எதிர் அணி கேப்டன் ஆன பொருள் நீ வீசு நாட்டம் அப்படியே எங்களிடமிருந்து வெற்றி பெற்று விட்டது என்றும் புகழாரம் சூட்டினார்.

தற்போது லீக் போட்டிகள் கிட்டத்தட்ட முடிவடைந்துள்ள நிலையில் பேட்ரியாட்ஸ் அணி முதலிடத்திலும் நைட் ரைடர்ஸ் அணி இரண்டாவது இடத்திலும் உள்ளன. கோப்பையை வெல்லப் போவது யார் என்ற பரபரப்பான சூழலில் ரசிகர்கள் நாக்அவுட் சுற்று போட்டிகள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

- Advertisement -