ஐபிஎல் போட்டிகளில் இருந்து கீரன் பொல்லார்ட் ஒய்வு!

0
180

ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு முடிவை அறிவித்திருக்கிறார் கீரன் பொல்லார்ட்.

ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் மும்பை அணிக்கு 2010ம் ஆண்டு ஏலத்தில் எடுக்கப்பட்ட கீரன் பொல்லார்ட், கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்குப் பிறகு தனது ஐபிஎல் வாழ்க்கைக்கு முடிவுரை எழுதியிருக்கிறார்.

2010 இவரை ஏலத்தில் விட்டபோது சில சுவாரசியமான நிகழ்வுகள் நடந்திருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் போன்ற அணிகள் கிட்டத்தட்ட 750,000 அமெரிக்க டாலர்கள் வரை இவரை எடுக்க ஏலத்தில் கேட்டது.

கடைசியாக மும்பை இந்தியன்ஸ் அணி டை-பிரேக்கர் முறைப்படி, குறிப்பிட முடியத பணத்திற்கு இவரை எடுத்தது. ஐபிஎல் வரலாற்றில் இப்படி எடுக்கப்பட்ட இரண்டாவது வீரர் இவர் ஆவார்.

அதன் பிறகு தொடர்ந்து எந்த அனைத்தும் செல்லாமல் மும்பை அணிக்கு மட்டுமே விசுவாசமாக இருந்து பல்வேறு வெற்றிகளை பெற்றுத் தந்திருக்கிறார். தனது ஐபிஎல் வாழ்க்கை முழுவதும் ஒரே அணிக்காக விளையாடிய வெகு சில வீரர்களும் இவரும் ஒருவர்.

கடந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் ஹர்திக் பாண்டியா அல்லது கீரன் பொல்லார்ட் இருவரில் ஒருவரை மட்டுமே தக்க வைக்க வேண்டும் என்ற நிலை மும்பை அணிக்கு ஏற்பட்டது. அப்போது தனது பணத்தை குறைத்துக் கொண்டு மும்பை அணியிலேயே இருக்கிறேன் என முடிவு செய்தார் கீரன் பொல்லார்ட்.

மும்பை அணிக்காக இவர் 171 போட்டிகளில் விளையாடி 3,412 ரன்கள் அடித்திருக்கிறார். இவரது ஸ்ட்ரைக் ரேட் கிட்டத்தட்ட 150 ஆகும். அதிகபட்சமாக 87 ரன்கள் அடித்திருப்பதோடு, 16 அரை சதங்களை அடித்திருக்கிறார். மேலும் 107 போட்டிகளில் பந்துவீசி 69 விக்கெட்டுகளை கைப்பற்றி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்ச்சியாக மும்பை அணியும் இவரை விட்டுக் கொடுக்காமல் தக்க வைத்துக் கொண்டது.

இந்த நிலையில் வருகிற டிசம்பர் மாதம் மினி ஏலம் நடைபெறுகிறது. அப்போது மும்பை அணி பொல்லார்ட்டை தக்க வைக்கவில்லை என்ற தகவல்கள் வந்தது. இது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திவிட்டது

இது தான் வாய்ப்பு என்று, இவரை எடுப்பதற்கு பல அணிகளும் திட்டமிட்டு வந்தன. ஆனால் மிகப்பெரிய திருப்புமுனையாக தனது ஐபிஎல் கிரிக்கெட் வாழ்க்கைக்கு ஓய்வு முடிவு அறிவித்திருக்கிறார் பொல்லார்ட இது பற்றி மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகத்தின் தொட்டில் பக்கத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

கீரன் பொல்லார்ட் மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியளராக நியமிக்கபட்டிருக்கிறார்.