தென் ஆப்பிரிக்காவை கதற விட்ட கவாஜா, ஸ்மித்; 3 விக்கெட் மட்டுமே இழந்து 400 ரன்கள்.. இது இந்தியாவிற்கு சாதகமா?

0
1364

3வது டெஸ்ட் போட்டியில் கவாஜா மற்றும் ஸ்மித் இருவரும் சதம் அடித்து தென் ஆப்பிரிக்கா அணிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளனர். இது இந்திய அணிக்கு எந்த அளவிற்கு சாதகமாக அமையும் என்பதை இங்கே பார்ப்போம்.

தென் ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியாவிற்கு சென்று டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளின் முடிவில் 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணி தொடரை கைப்பற்றிவிட்டது.

- Advertisement -

மூன்றாவது டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்கிறது. வார்னர் 10 ரன்களுக்கும், லபுஜானே 79 ரன்களுக்கும் ஆட்டம் இழந்தனர்.

மழையின் குறுக்கீட்டால் முதல் நாள் ஆட்டம் பாதியிலேயே தடைப்பட்டது. 147 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்திருந்தபோது முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. கவாஜா, ஸ்மித் இருவரும் களத்தில் இருந்தனர்.

இதனை தொடர்ந்து இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை விளையாடிய ஆஸ்திரேலியா வீரர்கள் கவாஜா மற்றும் ஸ்மித் இருவரும் தென் ஆப்பிரிக்கா பவுலர்களுக்கு பெருத்த சிக்கலை ஏற்படுத்தினர். இதில் ஸ்மித தனது 30ஆவது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்தார்.

- Advertisement -

மறுமுனையில் கவாஜா சதம் கடந்து 150 ரன்கள் எட்டியுள்ளார். சதம் அடித்தபின் ஸ்மித், 104 ரன்கள் இருந்தபோது, மகாராஜ் பந்தில் ஆட்டம் இழந்தார். தற்போது கவஜா மற்றும் டிராவிஸ் ஹெட் இருவரும் விளையாடி வருகின்றனர்.

இரண்டாம் நாள் ஆட்டத்தின் தேநீர் இடைவேளையின் போது, வெறும் மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்த ஆஸ்திரேலியா அணி 394 ரன்கள் எட்டியது. கவாஜா 172 ரன்களும் ஹெட் 17 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர்.

இந்த டெஸ்ட் போட்டியில் கட்டாயம் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்றால் மட்டுமே சிக்கல் இன்றி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களுக்குள் முன்னேற வாய்ப்பு ஆதிகமாகும், இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பையும் பெறமுடியும்.

மூன்றாவது டெஸ்ட்டை டிரா செய்தால் அல்லது தோல்வி அடைந்தால் அது பெருத்த சிக்கலாக மாறிவிடும். அடுத்து வரும் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் உள்ள இரண்டு போட்டிகளையும் வெல்ல வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால் அனைத்தும் இந்திய அணிக்கு சாதகமாக அமைந்து விடும்.

இந்திய அணி அடுத்து வரவிருக்கும் இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் 2-0 அல்லது 3-1 என்ற கணக்கில் கைப்பற்றினாலே இறுதிப் போட்டிக்கு முன்னேறி விடலாம். இந்திய ரசிகர்கள் தற்போது தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெறுவதை விரும்பமாட்டார்கள்.