ஸ்ரீகாந்தின் பேச்சுக்கு பதிலடி தந்த இந்திய வேகப்பந்துவீச்சாளர்.. “சிரிச்சிக்கிட்டு போய்டனும்” என கருத்து

0
889

இந்திய கிரிக்கெட் அணியில் இடது கை வேகப்பந்துவீச்சாளர்களுக்கு தேவை ஏற்பட்டுள்ளது. உலகில் உள்ள டாப் அணிகளில் இடது கை வேகப்பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். இவர்கள் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு எப்போதும் நெருக்கடியை ஏற்படுத்தக் கூடியவர்கள்.

- Advertisement -

இந்திய அணியில் ஜாகிர் கான், நெஹ்ரா உள்ளிட்ட நட்சத்திர இடது கை வேகப்பந்துவீச்சாளர்கள் இருந்தனர். 2011 ஆம் ஆண்டு உலக கோப்பையை இந்திய அணி வெல்ல இந்த இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள் ஒரு முக்கிய பங்கு ஆற்றினார்கள். ஆனால் ஜாகிர் கானின் ஓய்வுக்கு பிறகு இந்திய அணியில் வேறு ஒரு இடது கை வேகப் பந்துவீச்சாளரை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதனால் யாரேனும் உயரமான இடது கை வேகப் பந்துவீச்சாளரை நீங்கள் பார்த்தீர்கள் என்றால் என்னிடம் சொல்லுங்கள் என டிராவிட் நகைச்சுவையுடன் பேட்டி ஒன்றில் கூறினார். இந்த நிலையில் அண்டர் 19 இந்திய அளவில் சிறப்பாக விளையாடி சீனியர் அணியில் இடம் பிடித்த கலீல் அஹமத் , ஜாஹிர் கான் இடத்தை நிரப்புவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்திய அணிக்காக 11 டி20 போட்டி மற்றும் 14 ஒரு நாள் போட்டியில் விளையாடிய கலில் அகமத், கடைசியாக 2019 ஆம் ஆண்டு வங்கதேசத்துக்கு எதிரான இரண்டு டி20 போட்டியில் விளையாடி 81 ரன்கள் விட்டுக் கொடுத்தார்.

இதன் பிறகு  இந்திய அணியில் அவர் சேர்க்கப்படவே இல்லை.கலீல் அகமதை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த,  கடுமையாக விமர்சித்திருந்தார். இந்த நிலையில் தற்போது ஆகாஷ் சோப்ராவுக்கு கலீல் அகமது அளித்த பேட்டியில்  ஸ்ரீகாந்த் என்னை பற்றி கூறிய விஷயம் என் மனதை மிகவும் பாதித்தது. நான் இந்திய வீரன் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.

- Advertisement -

ஆனால் நான் அறிமுகமான காலத்தில் நான் ஒரு இளம் வீரர். இன்னும் நிறைய கற்றுக் கொள்ள வேண்டிய நிலையில் இருந்தேன்.

ஸ்ரீகாந்த் என்னை விமர்சித்ததை நான் பாசிட்டிவாக எடுத்துக் கொண்டேன். அதன் பிறகு கடுமையாக உழைத்தேன். என்னுடைய உடல் தகுதியை மேம்படுத்தினேன். சாப்பாட்டு விஷயத்தில் மிகவும் கவனமாக இருந்தேன்.

முன்பு இருந்ததைவிட தற்போது பத்து மடங்கு சிறந்த பவுலராக நிச்சயம் இருப்பேன். தற்போது போட்டியின் நுணுக்கங்கள் பேட்ஸ்மேன்கள் மனதை அறிவது போன்ற விஷயங்களில் நான் முன்னேறி இருப்பதாக கருதுகிறேன்.
என்னைப் பற்றி வரும் விமர்சனங்களை எல்லாம் நான் படிப்பது உண்டு. சில சமயம் அதனை சிரித்து விட்டு கடந்து சென்று விடுவேன் என்று கலீல் அகமது கூறியுள்ளார்.