50-ஓவர் உலககோப்பை பிளானில் இருக்கும் இந்திய வீரர்கள் ஐபிஎல் விளையாடக்கூடாதா? – ராகுல் டிராவிட் பேட்டி!

0
92

உலகக்கோப்பை தொடரில் விளையாடவுள்ள இந்திய வீரர்கள் ஐபிஎல்-இல் பங்கேற்பது சரியா? என்ற கேள்விக்கு ராகுல் டிராவிட் பதில் கொடுத்திருக்கிறார்.

50 ஓவர் உலகக் கோப்பை இந்த வருடம் இந்தியாவில் நடைபெறவிருக்கிறது. இதற்காக இந்திய அணியும் தீவிரமாக பல திட்டங்கள் வகுத்து விளையாடி வருகிறது. இதற்கிடையில் ஐபிஎல் தொடர் வரவுள்ளது.

- Advertisement -

பிசிசிஐ வகுத்து வரும் திட்டத்தில் இருக்கும் இந்திய வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் விளையாடினால் அவர்களது உடல்நிலை எவ்வாறு இருக்கும்? மேலும் அவர்களது பணிச்சுமை அதிகரிக்காதா? இதன் காரணமாக அவர்களின் செயல்பாடு சர்வதேச போட்டிகளில் குறைவதற்கும் வாய்ப்பு இருக்கிறது அல்லவா? என்கிற பல கேள்விகள் முன்வைக்கப்பட்டன.

சமீபத்தில் ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த போது அவரிடம் இந்திய வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவது சரியா? அவர்களுக்கு இந்த வருடம் அனுமதி இருக்கிறதா? என்கிற கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்கு பதில் அளித்த ராகுல் டிராவிட் கூறுகையில்,

“வீரர்கள் இன்ஜூரி அடையாமல் இருக்கும் வரை கண்டிப்பாக ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கலாம். அதற்கு எந்தவித கட்டுப்பாடும் இல்லை. வீரர்களின் பணிச்சுமையை பொறுத்தவரை, இப்போது விளையாட்டு வீரர்களுக்கு பணிச்சுமை என்பது ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. பல போட்டிகளில் விளையாட வேண்டும் என்றால் அதற்கு அவர்கள் தான் தங்களது பணிச்சுமையை உடல் தகுதியை பொறுத்து மேலாண்மை செய்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

இந்த வருடம் விதிக்கப்பட்டுள்ள புதிய விதிமுறைப்படி ஐபிஎல் அணிகளிடம் இந்திய வீரர்களின் உடல் தகுதி குறித்து அவ்வப்போது பேச்சுவார்த்தை நடத்தப்படும். வீரர்களின் உடல்நிலையும் அவ்வப்போது பரிசோதிக்கப்படும்.” என்று தெரிவித்தார்.