இரண்டு ஸ்பின்னர்களுக்கு ஆட்டமிழந்த ஒட்டுமொத்த பங்களாதேஷ் அணி – டிவிட்டரில் கலாய்க்கும் ரசிகர்கள்

0
306
Sa vs Ban Test

தென் ஆப்பிரிக்கா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் சமீபத்தில் நடந்து முடிந்தது. தொடரின் இறுதியில் பங்களாதேஷ் அணி தென் ஆப்ரிக்க அணியை 2-1 என்கிற கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடர் ஆரம்பித்த காரணத்தினால் பல்வேறு வீரர்கள் தென்ஆப்பிரிக்க அணியில் இடம்பெறவில்லை. அதன் காரணமாகவே பங்களாதேஷ் அணி சுலபமாக ஒருநாள் தொடரில் வெற்றி கண்டது.

ஒருநாள் தொடரை தொடர்ந்து இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முதல் டெஸ்ட் போட்டியின் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 220 ரன்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தி அபார வெற்றி கண்டுள்ளது.

- Advertisement -
ஸ்பின் பந்து வீச்சாளர்களின் ஆதிக்கத்தால் வீழ்ந்த பங்களாதேஷ்

டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 367 ரன்கள் குவித்தது. தென்ஆப்பிரிக்க அணியில் அதிகபட்சமாக டெம்பா பவுமா 93 ரன்கள் குவித்தார். பங்களாதேஷ் அணியில் மிக சிறப்பாக பந்து வீசிய காலித் அஹ்மத் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

அதன் பின்னர் விளையாடிய பங்களாதேஷ் அணி அதனுடைய முதல் இன்னிங்ஸ் முடிவில் 298 ரன்கள் குவித்தது. பங்களாதேஷ் அணியில் அதிகபட்சமாக மஹ்முதுல் ஹசன் 137 ரன்கள் குவித்தார். தென்ஆப்பிரிக்க அணியில் மிக சிறப்பாக பந்து வீசிய சிமோன் ஹார்மர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இரண்டாவது இன்னிங்சில் தென்னாபிரிக்க அணி 204 ரன்கள் குவித்து பங்களாதேஷ் அணிக்கு 273 இலக்காக அமைத்தது. தென் ஆப்பிரிக்க அணிக்கு 2வது இன்னிங்சில் அதிகபட்சமாக கேப்டன் டீன் எல்கர் 64 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

ஆனால் பங்களாதேஷ் அணி இரண்டாவது இன்னிங்ஸ்சில் 53 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது. 19 ஓவர்களில் அந்த அணி அதனுடைய அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது குறிப்பிடத்தக்கது. தென்ஆப்பிரிக்க அணியில் 10 ஓவர்கள் வீசி 32 ரன்கள் கொடுத்து 7 விக்கெட்டுகளை கேஷவ் மஹராஜ் கைப்பற்றினார். மீதமுள்ள 9 ஓவர்களில் சிமோன் ஹார்மர் பிசி 23 ரன்கள் குடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்த இரண்டு ஸ்பின் பந்து வீச்சாளர்கள் மட்டுமே இரண்டாவது இன்னிங்சில் பந்துவீசி ஒட்டுமொத்த பங்களாதேஷ் பேட்ஸ்மேன்கள் விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

ஆட்டநாயகன் விருது கேவ் மகாராஜாவிற்கு சென்றது.சொந்த மண்ணில் அணியை வெற்றி பெறச் செய்ய முடிந்ததில் சற்று உணர்ச்சி வசப்படுகிறேன் என்ற தன்னுடைய சந்தோஷத்தை வெளிப்படுத்தினார்.

ட்விட்டரில் பங்களாதேஷ் அணி குறித்து பதிவிடும் ரசிகர்கள் :

வினோதமான முறையில் ஆட்டமிழந்த பங்களாதேஷ் அணியை சுட்டிக்காட்டி ட்விட்டர் வலைதளத்தில் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். 150 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணிக்கு இரண்டு ஸ்பின் பந்து வீச்சாளர்கள் மட்டுமே பந்து வீசி அனைத்து விக்கெட்டுகளையும் கைப்பற்றிய காட்சியை எங்காவது பார்த்திருக்கிறீர்களா என்றும், கேஷவ் மஹராஜ் குறித்து பெருமையாக குறிப்பிட்டு பதிவிட்டு வருகின்றனர்.