அவர் இதைச் செய்யக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தார் – விராட் கோஹ்லியின் நிதான ஆட்டம் குறித்து ரபாடாவின் கருத்து

0
448
Virat Kohli and Rabada

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விராட் கோலியின் திறமை குறித்து விவாதிக்க எந்த ஒரு விஷயமும் இல்லை. 2011ஆம் ஆண்டு முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் அவர், தற்பொழுது வரை இந்திய அணியின் நம்பர் ஒன் பெஸ்ட் பேட்ஸ்மேன் ஆக வலம் வருகிறார். ஒரு வீரராக மட்டுமல்லாமல் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியை ஏற்று, பல வரலாற்று சிறப்பு வெற்றிகளைத் தேடி கொடுத்துள்ளார்.

ஒவ்வொரு வீரருக்கும் ஒரு ஏற்றத்தாழ்வு வரும். அதுபோல கடந்த இரண்டு ஆண்டுகளில் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக சிறப்பாக விளையாடினாலும், ஒரு வீரராக அவ்வளவு சிறப்பாக விளையாடவில்லை. குறிப்பாக கடந்த இரண்டு ஆண்டுகளில் அவர் ஒரு சதம் கூட குவித்ததில்லை என்பது வேதனை தரும் செய்தி.

- Advertisement -

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக நிதான ஆட்டம் ஆடிய விராட் கோலி

விராட் கோலி கடந்த சில போட்டிகளில் அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் திசையில் வரும் பந்தை கவர் டிரைவ் திசைக்கு செலுத்தும் முயற்சியில் தவறான ஷாட் அடித்து அவுட் ஆவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இந்திய ரசிகர் மட்டுமின்றி பல்வேறு முன்னணி கிரிக்கெட் வல்லுனர்கள் அவர் 4வது ஸ்டம்புக்கு மேல் சற்று தள்ளி ஆஃப் சைடு திசையில் வரும் வரும் பந்தை சற்று நிதானமாகக் அடித்து ஆட வேண்டும் என்று பலமுறை கூறி வலியுறுத்தியும் வந்தனர்.

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்றுக்கொண்டிருக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் நேற்று இந்திய அணி முதல் இன்னிங்சில் 10 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் கேப்டன் விராட் கோலி அதிகபட்சமாக 79 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

தென் ஆப்பிரிக்க பந்து வீச்சு அவர்களனைவரும் விராட் கோலியின் விக்கெட் கைப்பற்ற அவரது ஆசையை தூண்டினர் என்றுதான் சொல்ல வேண்டும். சரமாரியாக நிறைய பந்துகளை 4,5,6ஆவது ஸ்டம்ப் லைனில் வீசிக்கொண்டே இருந்தனர். ஆனால் நேற்று விராட் கோலி அவற்றையெல்லாம் கண்டுகொள்ளாமல் மிகவும் நிதானமாக கவனமாக விளையாடினார். தன்னுடைய பலவீனத்தை நன்றாக உணர்ந்து அதற்கு ஏற்றவாறு நேற்று அவர் ஆடிய விதம் இந்திய ரசிகர்கள் அனைவரையும் பெருமை கொள்ள வைத்தது.

- Advertisement -

விராட் கோலியை புகழ்ந்து தள்ளிய காகிசோ ரபாடா

நேற்று விராட் கோலி 79 ரன்கள் எடுத்த நிலையில் ரபாடா வீசிய பந்தில் ஆட்டமிழந்தார். கோலிலின் விக்கெட்டை கைப்பற்றிய அவர், “நேற்று விராட் கோலி மிக அற்புதமாக விளையாடினார். எந்த பந்தை மேற்கொள்ள வேண்டும், எந்த பந்தை மேற்கொள்ளக் கூடாது என்பதில் அவர் மிகவும் நம்பிக்கையுடன் இருந்தார். அவர் மிக பொறுமையாக அதே சமயம் நேர்த்தியாக நேற்று விளையாடினார், அவருக்கு என்னுடைய பாராட்டுக்கள்” என்று ரபாடா கூறியுள்ளார்.