காஷ்மீர் எக்ஸ்பிரஸ் உம்ரான் மாலிக்கை ஐசிசி உலக கோப்பை டி20 தொடரில் விளையாட வைக்க கூடாது – முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அதிரடி

0
84

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் 14 போட்டிகளில் விளையாடி 22 விக்கெட்டுகளை கைப்பற்றினார். கடந்த ஆண்டு அவர் வீசிய வேகத்தை விட இந்த ஆண்டு அதி வேகமாக வீசி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் விளையாடி 22 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதன் காரணமாகத் தற்பொழுது அவருக்கு இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் அவரும் ஒரு வீரராக இந்திய அணியில் தற்போது பயணித்துக் கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் நடந்து முடிந்த முதல் டி20 போட்டியில் அவருக்கு விளையாடும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இனி அடுத்து வரும் போட்டிகளில் அவருக்கு விளையாடும் வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் இருக்கும் நிலையில் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அவரைப் பற்றி தற்பொழுது பேசியிருக்கிறார்.

உலக கோப்பை டி20 தொடரில் அவருக்கு விளையாடும் வாய்ப்பு கொடுக்கக் கூடாது

இந்திய ரசிகர்கள் அனைவரும் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற இருக்கும் உலக கோப்பை டி20 தொடரில் அவருக்கு ( உம்ரான் மாலிக்) விளையாடும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கூறி வருகின்றனர். ஆனால் அவ்வாறு அவருக்கு விளையாடும் வாய்ப்பு கொடுக்கக் கூடாது.

அவருக்கு தற்பொழுது மிகவும் குறைவான வயது. இப்பொழுதுதான் அவர் அடுத்த கட்டத்திற்கு முன்னேறி கொண்டிருக்கிறார். அவரை இந்திய அணியுடன் இணைத்துக்கொள்ளுங்கள் அவரை முதலில் 50 ஓவர் கிரிக்கெட் அதாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வையுங்கள். ஏன் டெஸ்ட் போட்டிகளில் கூட அவரை விளையாட வையுங்கள். அவரை சிறந்த வேகப்பந்து வீச்சாளராக மெருகேற்றுங்கள். உடனடியாக முடிவு எடுத்து அவருக்கு அழுத்தத்தை நாம் கொடுத்து விடக்கூடாது.

அவர் தன்னை உலக கோப்பை தொடர்களில் விளையாடும் அளவுக்கு தயார்படுத்திக் கொள்ளட்டும். அதன்பின்னர் அவர் உலக கோப்பை தொடர்களில் பங்கேற்கட்டும். அதுதான் அவருக்கு சரியாக இருக்கும். இவ்வாறு ரவி சாஸ்திரி தன்னுடைய கருத்தை நம்மிடம் பகிர்ந்து கொண்டுள்ளார்.

ஒருவகையில் ரவிசாஸ்திரி கூறுவதும் சரிதான். அவ்வளவாக அனுபவம் இல்லாத அவரை திடீரென உலக கோப்பை தொடரில் விளையாட வைத்து ஒரு வேளை அவர் சரியாக விளையாடாமல் போனால் அது அவருடைய கேரியரை பாதிக்கும். எனவே அவர் நன்கு தயார் ஆகி பின்னர் விளையாடுவதுதான் சரி.