பும்ராவுக்கு எதிரா என் பிளான் இதுதான்.. வேற வழியும் எனக்கு அப்ப இல்ல – கம்பேக் கருண் நாயர் பேட்டி

0
182
Karun

ஐபிஎல் தொடரில் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு அதிரடி அரைசதம் அடித்து கம்பேக் கொடுத்து இருக்கும் கருண் நாயர் தனக்கான வாய்ப்பு எப்படி அமைந்தது என்பது குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார்.

நேற்றைய போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் பாப் டு பிளேசிஸ் காயம் காரணமாக விளையாடவில்லை. இதனால் இந்த முறை சமீர் ரிஸ்விக்கு வாய்ப்பு கொடுக்காமல் கருண் நாயருக்கு பயிற்சியாளர் ஹேமங் பதானி வாய்ப்பு கொடுத்தார்.

- Advertisement -

ஏறக்குறைய 2500 நாட்கள்

இந்த நிலையில் 2500 நாட்கள் கழித்து ஐபிஎல் தொடரில் மறு வாய்ப்பு பெற்று வந்த கருண் நாயர் அசத்தலாக விளையாடி 22 பந்தில் சதம் அடித்தார். நேற்று அவர் மொத்தம் 40 பந்துகளை சந்தித்து 12 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் உடன் 89 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். இவர் ஆட்டம் இழந்த பிறகு டெல்லி தனது விக்கெட்டுகளை வேகமாக இழந்து எதிர்பாராத தோல்வி அடைந்தது. மேலும் நேற்றைய போட்டியில் பும்ரா பந்துவீச்சில் சிக்ஸர்கள் பவுண்டரிகள் என ஆச்சரியப்படுத்தினார். களத்தில் இருவருக்கும் உரசிக்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

தன்னுடைய கம்பேக் குறித்து பேசி இருக்கும் ” வெளிப்படையாக நான் நல்ல நம்பிக்கை உடன் இருந்தேன். மேலும் நான் நல்ல ஓட்டத்தில் இருந்த காரணத்தினால் அதை அப்படியே தொடர்ந்து செல்ல விரும்பினேன். அதே சமயத்தில் சரியான பந்துகளை தேர்ந்தெடுத்து சரியான திசையில் அடிக்க வேண்டும். மேலும் இந்த நேரத்தில் உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளர் பும்ரா. எனவே அவர் எங்கு பந்து வீசுகிறார் என்பதில் நான் மிகவும் தெளிவாக கவனமாக இருக்க விரும்பினேன். இருந்த போதிலும் என்னை நான் மிகவும் ஆதரித்துக் கொண்டேன்”

- Advertisement -

நான் காத்துக் கொண்டிருந்தேன்

“இந்த போட்டியில் வெளிப்படையாகவே நாங்கள் எங்கள் சிறந்த தொடக்க ஆட்டக்காரரை இழந்துவிட்டோம். எங்களில் வெளியில் அமர்ந்திருக்கும் பேட்ஸ்மேன்கள் யாரோ ஒருவருக்கு நிச்சயம் வாய்ப்பு எப்பொழுது வேண்டுமானாலும் வரும் என்று தெரியும். இதனால் நான் மனதளவில் தயாராக இருந்தேன். வாய்ப்பு கிடைக்கும் பொழுது என்னால் செய்ய முடியும் என்று நம்பினேன். எனக்கு வாய்ப்பு கிடைத்த சிறப்பாக விளையாடியதில் மகிழ்ச்சி அடைகிறேன்”

இதையும் படிங்க : இதுக்கு ரோகித்தே கேப்டனா இருக்கலாம்.. போட்டியை மாற்றிய சம்பவம்.. ஜெயித்தும் ஹர்திக்கின் பரிதாப நிலைமை

“நேற்று சரியான முறையில் பார்ட்னர்ஷிப்பை உருவாக்க முடியவில்லை. ஏனென்றால் நாம் அனைவருமே விரைவாக ரன்கள் எடுக்க விரும்புகிறோம். நான் முன்பே சொன்னது போல இது ஒரு நல்ல கற்றல். இதை முன்னோக்கி எடுத்துச் சென்று இதுவரை தொடர்ந்து வந்த வெற்றி வேகத்தை எடுத்து சென்று தொடர முயற்சி செய்வோம்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -