இவரை நியாபகம் இருக்கிறதா? சாதனை நாயகன் கருண் நாயர் உருக்கம்

0
1096

இந்திய வங்கதேச அணிகள் இடையிலான டெஸ்ட் தொடர் வரும் 14ஆம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் 12 ஆண்டுகளுக்கு பிறகு ஜெய் தேவ் உனாட்கட் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு ரசிகர்கள் பலரும் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர். இடது கை வேகப்பந்துவீச்சாளரான ஜெய்தேவ் உனாட்கட், தனது முதல் டெஸ்ட் போட்டியை 2010 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் விளையாடினார்.

- Advertisement -

ஐபிஎல் தொடரில் அப்போது வசீம் அக்ரமால் பட்டை தீட்டப்பட்ட உனாட்கட் அந்த தொடரில் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இது குறித்து கருத்து தெரிவித்த வாசிம் அக்ரம்,  பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளத்தில்  அறிமுக போட்டியில் பந்துவீசிய துரதிர்ஷ்டவசமாக அணியிலிருந்து நீக்கப்பட்டு விட்டதாக வேதனை தெரிவித்திருந்தார். இதனை அடுத்து உனாட்கட்  ஒரு போட்டியில் கூட வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் மனம் உடைந்த உனாட்கட், சில மாதங்களுக்கு முன்பு டெஸ்ட் கிரிக்கெட் எனக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடு.. ப்ளீஸ் என்று பதிவிட்டிருந்தார். தற்போது அவர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டிருப்பது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த நிலையில் தான் கருண் நாயர் அதேபோன்ற ஒரு உருக்கமான பதிவை போட்டு உள்ளார். 2016 ஆம் ஆண்டு தன்னுடைய அறிமுக டெஸ்ட் தொடரில் இங்கிலாந்துக்கு எதிராக கருண் நாயர் முச்சதம் விளாசினார். கருண் நாயர், அதன் பிறகு இந்திய அணியில் பெரிய அளவில் சேர்க்கப்படவில்லை.கடைசியாக 2017 ஆம் ஆண்டு தான் இந்திய அணிக்காக விளையாடி இருக்கிறார். அதன் பிறகு ஒரு முறை கூட ஒரு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இதனால் மனம் உடைந்த கருண் நாயர், ஜெய்தேவ் உனாட்கட் போல், கிரிக்கெட்  எனக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடு ப்ளீஸ் என்று பதிவிட்டுள்ளார். கருண் நாயரின் இந்த டிவீட்டுக்கு ரசிகர்கள் பலரும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். ரஹானேக்காக கருண் நாயர், இந்திய அணியில் சேர்க்கப்படாமல் இருந்தார். தற்போது ரஹானே  ஃபார்ம் இல்லாத காரணத்தால் இந்திய அணியிலிருந்து  நீக்கப்பட்டிருக்கிறார். தொடர்ந்து கிரிக்கெட் விளையாடி வருவதால் இந்திய அணிக்கு டெஸ்ட், ஒரு நாள் டி20 என இரண்டு அணிகளை தயார் படுத்த வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்து வரும் நிலையில், கருண் நாயர் போன்ற வீரரை பயன்படுத்த வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

- Advertisement -