“ரவி சாஸ்திரிக்கு பொறுமையை கிடையாது. இந்த விஷயத்தில்..” உண்மையை வெளியே சொன்ன தினேஷ் கார்த்திக்!

0
232

ரவி சாஸ்திரி, வீரர்களிடம் இந்த விஷயத்தை மட்டும் பொறுத்துக் கொள்ளவே மாட்டார் என்று சமீபத்திய பேட்டியில் தினேஷ் கார்த்திக் மனம் திறந்து பேசி இருக்கிறார்.

இந்திய அணியின் முன்னாள் தலைமை பெயர்ச்சியாளர் ரவி சாஸ்திரி தலைமையில் இந்திய அணி இங்கிலாந்து, ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்களை அபாரமாக வென்றிருக்கிறது. மேலும் பல வேகப்பந்து பேச்சாளர்களை உருவாக்கி இருக்கிறது. ரவி சாஸ்திரி மற்றும் விராட் கோலி இருவரின் ஜோடி இந்திய டெஸ்ட் அணியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றது என்று கூறினால் சற்றும் மிகையாகாது.

- Advertisement -

முகமது சமி, புவனேஸ்வர் குமார், உமேஷ் யாதவ், பும்ரா ஆகியோர் இவரது காலகட்டத்தில் உச்சத்தை எட்டினாலும், முகமது சிராஜ், ஷ்ரதுல் தாக்கூர், ஹர்திக் பாண்டியா போன்ற இளம் வீரர்களை இந்திய அணிக்குள் கொண்டுவந்து அணியை எதிர்காலத்திற்கு நன்றாக வளர்த்ததில் முக்கிய பங்கு உண்டு.

இந்நிலையில் ரவி சாஸ்திரி பற்றி யாரும் அறிந்திராத உண்மையை சமீபத்திய பேட்டி ஒன்றில் மூத்தவிரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். ” ரவி சாஸ்திரிக்கு பொறுமை இருக்காது. பேட்ஸ்மேன்கள் எத்தனை வேகமாக பந்து வந்தாலும் எதிர்கொள்ள வேண்டும். அதில் தவறினால், ரவி சாஸ்திரி பொறுத்துக் கொள்ள மாட்டார். மேலும் ரவி சாத்திரி அவ்வளவு எளிதாக யாரையும் பாராட்டமாட்டார். இந்திய அணியில் ஒவ்வொருவரிடமும் என்ன தேவை என்பதில் ரவி சாஸ்திரி தெளிவாக இருப்பார். அதை கொடுக்கவில்லை என்றால் அவ்வளவு எளிதில் பொறுத்துக் கொள்ளமாட்டார். வீரர்களை தங்களது உயரத்தை அடைய மிகவும் உந்துகோளாகவும் அவர் செயல்படுவார்.” என தினேஷ் கார்த்திக் குறிப்பிட்டார்.

ரவி சாஸ்திரி வீரர்கள் பற்றி மிகவும் ஓபனாக கூறக்கூடியவர். அதே நேரம் வீரர்களுக்கு ஏதாவது பிரச்சினை நேர்ந்தால் அதை முன்நின்று சமாளிக்க கூடியவர். எத்தகைய பிரச்சனை என்றாலும் உடன் நிற்பார் என பல வீரர்கள் குறிப்பிட்டு இருக்கின்றனர். அதேபோல் விமர்சனங்கள் இருந்தால் தயக்கமின்றி முன்வைப்பார். 2018 ஆம் ஆண்டு சித்தேஸ்வரர் புஜாரா மோசமாக விளையாடிய போது, பொதுவெளியில் அதை விமர்சித்தார். 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் ரிஷப் பன்ட் மோசமான ஷாட்கள் விளையாடிய போது அதையும் விமர்சித்தார். இது குறித்தும் தினேஷ் கார்த்திக் தெளிவுபடுத்தினார்.

- Advertisement -

“ரவி சாஸ்திரி உங்களை நம்பினார் என்றால் நீங்கள் தைரியமாக இந்திய அணியில் செயல்படலாம். ஏனெனில் உங்களிடம் என்ன தேவை என்பதில் தெளிவாக இருப்பார். அதை உங்களிடம் எப்படி வாங்க வேண்டும் என்றும் அவருக்கு நன்றாக தெரியும். ஒவ்வொரு நிமிடமும் அப்படி செய்ய வேண்டும் இப்படி செய்ய வேண்டும் என்று உந்துதலாக இருப்பார். அவர் ஒரு பயிற்சியாளராக பழகியதை விட உங்கள் வாழ்க்கைக்கு ஆலோசகராகவும் சில நேரங்களில் இருப்பார். அந்த வகையில் ரவி சாஸ்திரி போன்று வேறு எவரையும் பார்த்திட முடியாது. ரவி சாஸ்திரி ஒரு வீரராக நன்றாக செயல்படவில்லை என்றாலும் பயிற்சியாளராக இந்திய அணியின் எதிர்பார்த்ததை விட நிறைய செய்திருக்கிறார். அதேநேரம் உங்களிடம் தவறு ஏதேனும் இருந்தால் அதை அந்த தருணமே இதைப் பற்றியும் கவலைப்படாமல் எடுத்து முன் வைப்பார் இந்த குணமும் ஒரு பயிற்சியாளருக்கு தேவை.” என்றும் புகழாரம் சூட்டினார்.