டெஸ்ட் கேப்டன் பொறுப்பிலிருந்து கேன் வில்லியம்சன் விலகல்! என்ன நடந்தது?

0
1791

நியூசிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகி இருக்கிறார் கேன் வில்லியம்சன்.

கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் நியூசிலாந்து அணிக்கு கேப்டன் பொறுப்பேற்று விளையாடி வந்த கேன் வில்லியம்சன், டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்திருக்கிறார்.

- Advertisement -

ப்ரண்டன் மெக்கல்லம் ஓய்வு பெற்ற பிறகு அந்த கேப்டன் பொறுப்பை வகித்த கேன் வில்லியம்சன், 38 டெஸ்ட் போட்டிகளில் அணியை வழி நடத்தி இருக்கிறார். அதில் 22 டெஸ்ட் போட்டிகளில் நியூசிலாந்து அணிக்கு வெற்றியை பெற்று தந்திருக்கிறார்.

ஓய்வுக்கு பின் பேசிய அவர் “டெஸ்ட் கிரிக்கெட்டில் பிளாக்கேப்ஸ் கேப்டனாக இருந்தது நம்பமுடியாத சிறப்பு மரியாதை,” எனக்கு கூறினார். மேலும்,  “என்னைப் பொறுத்தவரை, டெஸ்ட் கிரிக்கெட் என்பது கிரிக்கெட் விளையாட்டின் உச்சம். உச்சபட்ச போட்டியில் அணியை வழிநடத்தும் சவால்களை நான் அனுபவித்தேன். எனக்கு நிறைய மனவலிமையை அது கொடுத்தது.

“கேப்டன் பொறுப்பில் சமீப காலமாக அதிக பணிச்சுமையாக உணர்கிறேன். எனது சொந்த வாழ்க்கையை அது பாதித்து வருகிறது. பொறுப்பில் இருந்து விலகுவதாக முடிவெடுப்பதற்கு சரியான நேரம் இதுவென நான் உணர்கிறேன். நியூசிலாந்து வாரியத்திடம் பேசிய பிறகு, லிமிடட் ஓவர் போட்டிகளுக்கு மட்டும் தொடர்ந்து கேப்டனாக இருப்பது விரும்பத்தக்கது என்று நாங்கள் உணர்ந்தேன். 2023 50ஓவர் உலகக்கோப்பை மட்டுமே எனது கவனமாக இருக்கிறது.” என்று வில்லியம்சன் மேலும் கூறினார்.

- Advertisement -