வில்லியம்சனுக்கு டாட்டா காட்டிய ஹைதராபாத்; புவி கேப்டனாகிறாரா? – மொத்தமாக மாறும் எஸ்ஆர்எச்!

0
5708

கேன் வில்லியம்சனை வெளியேற்றி இருக்கிறது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. புதிய கேப்டனாக யாரை நியமிக்க உள்ளது என்கிற சந்தேகமும் எழுந்துள்ளது.

2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலம் வருகிற டிசம்பர் மாதம் நடைபெறுகிறது. இந்த ஏலத்தில் பங்கேற்பதற்கு முன்னர் ஒவ்வொரு அணியும் தங்களது அணியின் வீரர்களில் யாரை தக்க வைக்க வேண்டும்? யாரை வெளியேற்ற வேண்டும்? என முடிவு செய்து அதற்கான இறுதிப் பட்டியலை நவம்பர் 15ஆம் தேதி மாலைக்குள் ஐபிஎல் நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.

- Advertisement -

இதற்கான கால அவகாசம் முடிவடைந்திருக்கிறது. ஒவ்வொரு அணியும் ஒன்றன்பின் மற்றொன்றாக தக்கவைக்கப்பட்ட, வெளியேற்றபட்ட பட்டியல் மற்றும் வேறு அணியிலிருந்து டிரேட் செய்யபட்ட வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தக்கவைக்கப்பட்ட மற்றும் வெளியேற்றியுள்ள வீரர்களின் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. இதில் பலரும் ஆச்சரியப்படுத்தும் விதமாக, கேன் வில்லியம்சனை வெளியேற்றி உள்ளது.

மேலும் மற்றொரு நட்சத்திர வீரர் நிக்கோலஸ் பூரான் வெளியேற்றப்பட்டு இருக்கிறார். கேன் வில்லியம்சன் வெளியேற்றப்பட்டு இருப்பதால், அடுத்த கேப்டனாக யார் இருப்பார்? என்ற கேள்விகளும் எழுந்திருக்கிறது. அடுத்த மூத்த வீரர்கள் வரிசையில் இருப்பது புவனேஸ்வர் குமார். இவர்தான் கேப்டனாக நியமிக்கப்பட உள்ளாரா? என்று சந்தேகங்கள் எழுந்திருக்கிறது

- Advertisement -

மொத்தம் 12 வீரர்களை வெளியேற்றி, தனது கைவசம் 42.25 கோடி ரூபாயை வைத்துள்ளது சன் ரைசர்ஸ் அணி. 4 வெளிநாட்டு வீரர்கள் இடம் காலியாக உள்ளது.

கிட்டத்தட்ட ஒட்டுமொத்த அணியையும் மாற்றியமைக்க உள்ளது தெளிவாக தெரிகிறது. டிசம்பரில் வரவிருக்கும் ஐபிஎல் ஏலம் ஹைதராபாத் அணிக்கு மிகமுக்கியமானதாக இருக்கும். புதிய கேப்டனை ஏலத்தில் எடுக்குமா? இல்லை, தக்கவைக்கப்பட்ட வீரர்களில் ஒருவர் நியமிக்கப்படுவரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வீரர்களை தக்கவைத்தது:

ராகுல் திரிபாதி, க்ளென் பிலிப்ஸ், அபிஷேக் சர்மா, ஐடன் மார்க்ரம், அப்துல் சமத், வாஷிங்டன் சுந்தர், மார்கோ ஜான்சன், புவனேஷ்வர் குமார், உம்ரான் மாலிக், டி நடராஜன், கார்த்திக் தியாகி, ஃபசல்ஹாக் ஃபரூக்கி

விடுவிக்கப்பட்ட வீரர்கள்: கேன் வில்லியம்சன், நிக்கோலஸ் பூரன், ஜெகதீஷா சுசித், பிரியம் கார்க், ரவிக்குமார் சமர்த், ரொமாரியோ ஷெப்பர்ட், சவுரப் துபே, சீன் அபோட், ஷஷாங்க் சிங், ஷ்ரேயாஸ் கோபால், சுஷாந்த் மிஸ்ரா, விஷ்ணு வினோத்.