இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து கசிகோ ரபாடா விலகியதற்கு இதுதான் காரணம்

0
128
Kasigo Rabada

இந்திய அணி தற்போது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி முடித்து உள்ளது. முதல் போட்டியில் எளிதாக வெற்றி பெற்ற இந்திய அணி அடுத்த 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் என்று ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருந்தனர். ஆனால் வரிசையாக இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டிகளில் தோல்வியை சந்தித்து இந்தியா தொடரை இழந்தது. இதை விட பெரிய அதிர்ச்சியாக இந்த தொடர் முடிந்ததுமே இந்திய அணியின் கேப்டன் கோலி டெஸ்ட் போட்டிகளில் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

ஏற்கனவே கோலி டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளின் கேப்டன் பதவியில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது. தற்போது சுமார் 5 ஆண்டுகளில் முதன்முறையாக கேப்டனாக அல்லாமல் சாதாரண வீரராக கோலி பங்கேற்க உள்ளார். தற்போது தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக நடக்கவுள்ள ஒருநாள் தொடருக்கு ரோஹித் காயம் காரணமாக அவதிப்பட்டு வருவதால் அவருக்கு பதிலாக ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதனால் ராகுல் தலைமையில் தற்போது கோலி விளையாட உள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் இன்று தொடங்கும் ஒருநாள் தொடரில் இருந்து தென் ஆப்பிரிக்க அணியின் முக்கிய வீரர் ஒருவர் பங்கேற்காமல் ஒதுங்கி உள்ளார். அந்த அணியின் சீனியர் வேகப்பந்துவீச்சாளர் ககிசோ ரபாடா டெஸ்ட் தொடரில் பங்கேற்றதோடு ஒருநாள் தொடரில் பங்கேற்காமல் விலகியுள்ளார். இதற்கு முக்கிய காரணமாக ரபாடாவின் அதிகமான வேலைப்பளு கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து ஆட்டங்களில் பங்கேற்று கொண்டே இருப்பதால் அவர் காயமடைந்து விடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கையாக இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.

ரபாடாவின் தீவிர வேகம் எப்போதுமே எதிரணி வீரர்களை தொந்தரவு செய்யக் கூடியது. இதன் காரணமாக இவர் தற்போது விலகி இருப்பது இந்திய அணிக்கு மிகவும் நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ரோகித் இல்லாத நிலையில், இந்திய அணி இன்று தொடரை வெல்ல வேண்டும் என்றால் மிகவும் அதிகம் உழைக்க வேண்டும். தற்போது ரபாடா விலகியுள்ளது இதற்கு மிகவும் உதவி செய்யும். இதைப் பயன்படுத்தி இந்திய அணி டெஸ்ட் தொடரில் பெற்ற தோல்விக்கு ஈடு கட்ட ஒரு நாள் தொடரை கைப்பற்றுமா என்று பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்