கே.எல்.ராகுல் பொறுப்பான ஆட்டம் ; இலங்கையை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா!

0
3553
ICT

மூன்று கோட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் தற்போது இந்தியா வந்துள்ள இலங்கை அணி இந்திய அணியுடன் மோதி வருகிறது!

மும்பையில் நடைபெற்ற இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகித்தது. இந்த நிலையில் இன்று கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இரண்டாவது போட்டி நடைபெற்றது!

இந்தப் போட்டிக்கான டாசில் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 215 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இலங்கை அணி தரப்பில் அறிமுக வீரர் நுவனிது பெர்னாடோ அரை சதம் அடித்தார். இந்திய அணி தரப்பில் குல்தீப் பத்து ஓவர்கள் பந்து வீசி 51 ரன்கள் விட்டு தந்து மூன்று விக்கட்டுகளை கைப்பற்றினார்.

இதற்கு அடுத்து களம் இறங்கிய இந்திய அணியில் ரோகித் சர்மா 17, கில் 21, விராட் கோலி 4, ஸ்ரேயாஸ் 28, ஹர்திக் பாண்டியா 36 ரன்களில் வெளியேறினார்கள்.

ஆனால் ஒரு முனையில் மிகப் பொறுமையாக நின்று ஆட்டத்தை நகர்த்தி இறுதிவரை ஆட்டம் இழக்காமல் 103 பந்துகளில் 64 ரன்களை 6 பவுண்டர்கள் மூலம் எடுத்து கே.எல்.ராகுல் வெற்றிக்கு வழி வகுத்தார். இலங்கை அணி தரப்பில் சமீக கருணரத்னே எட்டு ஓவர்கள் பந்து வீசி 51 ரன்கள் விட்டு தந்து இரண்டு விக்கட்டுகளை கைப்பற்றினார்!

மூன்று போட்டிகள் கொண்ட இந்த ஒரு நாள் தொடரை இந்திய அணி தற்போது முதல் இரண்டு போட்டிகளை வென்று கைப்பற்றி இருக்கிறது. இந்த நிலையில் அடுத்த போட்டியில் சூரியகுமார் யாதவ் களமிறங்க அதிகபட்ச வாய்ப்புகள் இருக்கிறது!