“வெளியில் வந்து நாட்டுக்காகப் போட்டிகளை வெல்ல அவர் பசியோடு இருக்கிறார்” – விராட் கோலி பற்றி கேஎல்.ராகுல் நீண்ட பதிலடி!

0
100
K. L. Rahul

ஆறு ஆசிய அணிகளைக் கொண்டு நாளை ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஆரம்பிக்கிறது. முதல் போட்டியில் இலங்கை ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதற்கு அடுத்த ஞாயிற்றுக்கிழமை இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன!

இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதுவது எப்பொழுதும் பரபரப்பான ஒரு விஷயம்தான் என்றாலும், தற்போது இதையும் தாண்டி விராட் கோலியின் பேட்டிங் பாவம் பெரிய விவாதப் பொருளாக இருந்து வருகிறது. அவருக்கு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே உடனான தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டு மூன்று வாரங்களுக்குப் பிறகு மீண்டும் இந்திய அணியில் ஆசிய கோப்பை காக இணைத்துக் கொள்ளப்பட்டு இருக்கிறார்.

- Advertisement -

புதன்கிழமை ஆரம்பிக்கப்பட்ட பயிற்சியில் விராட் கோலி புத்துணர்ச்சியோடு மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ஆசிய கோப்பையிலும் பாகிஸ்தான் அணி ஓடும் விராட்கோலி மிகச்சிறந்த எண்களை கொண்டிருக்கிறார். இவர் மீண்டும் பாகிஸ்தான் அணியோடு சிறப்பாக செயல்பட்டு தனது பழைய பேட்டிங் பார்ம்க்கு வருவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து வருகிறது.

நடைபெற இருக்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்து அக்டோபரில் ஆஸ்திரேலியாவில் நடக்கவிருக்கும் டி20 உலகக் கோப்பை தொடரில் விராட் கோலி இந்திய அணியில் இருப்பாரா இல்லையா என்பதை முடிவு செய்யும் தொடராகவே இருக்கும் என்று பலராலும் கணிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் சுழற்பந்துவீச்சாளர் டேனிஷ் கனேரியா விராட் கோலிக்கு பதில் ஒரு இளம் இந்திய வீரருக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

தற்போது பத்திரிக்கையாளர்களை சந்தித்த இந்திய அணியின் துணை கேப்டன் கேஎல் ராகுல் இதற்கு பதிலளிக்கும் விதமாக கூறியிருக்கிறார். அதில் அவர் ” நாங்கள் உண்மையில் வெளியிலிருந்து வரும் கருத்துக்களுக்கு அதிக மதிப்பு அளிப்பதில்லை. ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து இருக்கிறது ஆனால் அது வீரர்களை பாதிப்பது இல்லை. குறிப்பாக விராட் கோலி போன்ற உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் வெளியில் கூறுவதால் அதனால் பாதிப்படைய மாட்டார்கள்” என்று தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய கே எல் ராகுல் ” அவருக்கு சிறிய ஓய்வு கிடைத்தது. அவர் தனது பேட்டிங்கில் வேலை செய்கிறார். நான் காயம் அடைந்து வீட்டில் இருந்தபோது தொலைக்காட்சியில் அவரது பேட்டிங்கை பார்த்தேன், அதில் அவர் பேட்டிங் ஃபார்மில் இல்லாதது போல தெரியவில்லை. அவர் நன்றாக பேட்டிங் செய்தார். ஆனால் அவரே நிர்ணயித்த அவரது பேட்டிங் தரத்திற்கு ஏற்ப இப்போது அவரால் செயல்பட முடியவில்லை என்பது தான் உண்மை. அவர் இதிலிருந்து வெளியே வந்து நாட்டிற்காக போட்டிகளை வெல்லவேண்டும் என்ற பசியில் இருக்கிறார். இதைத்தான் அவர் தனது வாழ்க்கை முழுக்க செய்து வருகிறார். அவரது மனநிலை எப்போதும் இப்படித்தான் இருக்கும் அவர் கேப்டனாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் கூட” என்று தெரிவித்தார்.

மேலும் கேள்விகள் தொடர பதிலளித்த கே எல் ராகுல் ” ஒரு வீரர் இந்த மனநிலையில் இருந்தால் நல்லதே நடக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அனைவரும் பேசும் விராட் கோலியின் பேட்டிங் ஃபார்ம் மீண்டும் சிறப்பான நிலைக்கு வர வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால் ஒரு அணியாக எங்களுக்கு இது கவலையான விஷயம் கிடையாது. மிகவும் உறுதியாக இருக்கிறார் யாரும் கவலைப்பட வேண்டாம். நாங்கள் உலக கோப்பைக்காக அதற்கு முன்பு சிறிது விளையாட விரும்புகிறோம். உலக கோப்பைக்கு முன்பாக பேட்ஸ்மேன்களும் பந்து வீச்சாளர்களும் சிறிது விளையாடி நல்ல நிலைமையில் இருப்பது முக்கியம். இது தான் எங்களது திட்டம். நாங்கள் ஒரு தனிப்பட்ட வீரராகவும் ஒரு அணியாகவும் என்ன செய்யப்போகிறோம் என்பது தான் முக்கியம்” என்று தெரிவித்தார்!