புதிய உருவமேடுக்கும் பஞ்சாப் கிங்ஸ்; முன்னாள் இந்திய துவக்க வீரர் புதிய பயிற்சியாளராக நியமனம்!

0
9154

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு புதிய பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார் வாசிம் ஜாபர்.

2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் புது உத்துவத்துடன் களமிறங்க அணியில் பல மாற்றங்களை செய்து வருகிறது பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்வாகம்.

- Advertisement -

கடந்த சீசனில் பஞ்சாப் அணிக்கு கேப்டனாக இருந்த மயங்க் அகர்வால், அணியிலிருந்து வெளியேற்றப்பட்டு இருக்கிறார். ஷிகர் தவான் அந்த கேப்டன் பொறுப்பை ஏற்று விளையாடுவார் என்று பஞ்சாப் பணி நிர்வாகம் அறிவித்திருக்கிறது.

ஐபிஎல் ஏலத்திற்கு முன்பு 8 வீரர்களை வெளியேற்றி தனது பார்சில் 32.25 கோடி ரூபாயை வைத்திருக்கிறது பஞ்சாப் அணி.

வீரர்களில் மட்டுமல்லாது பயிற்சியாளர்களிலும் சில மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறது பஞ்சாப் அணி நிர்வாகம். இந்திய அணியின் முன்னாள் துவக்க வீரர் வாசிம் ஜாஃபர் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

- Advertisement -

முன்னாள் தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் சால் லாங்கவேல்ட் பஞ்சாப் அணியின் வேகப்பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

துணை பயிற்சியாளராக ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் பிராட் ஹேடின் நியமிக்கப்பட்டுள்ளார்.

பஞ்சாப் கிங்ஸ் அணியால் தக்கவைக்கப்பட்ட வீரர்கள்:

சிகர் தவான் (கேப்டன்), ஷாருக் கான், ஜானி பேர்ஸ்டோவ், பிரப்சிம்ரன் சிங், பானுகா ராஜபக்சே, ஜிதேஷ் சர்மா, ராஜ் பாவா, ரிஷி தவான், லியாம் லிவிங்ஸ்டோன், அதர்வா டைடே, அர்ஷ்தீப் சிங், பால்தேஜ் சிங், நாதன் எல்லிஸ், ககிசோ ரபாடா, ராகுல் சாஹர், ஹர்ப்ரீத் பிஆர்

பஞ்சாப் கிங்ஸ் அணியால் விடுவிக்கப்பட்ட வீரர்கள்:  

மயங்க் அகர்வால், ஒடியன் ஸ்மித், வைபவ் அரோரா, பென்னி ஹோவெல், இஷான் போரல், அன்ஷ் படேல், பிரேரக் மன்கட், சந்தீப் சர்மா, ரிட்டிக் சாட்டர்ஜி.