சி.எஸ்.கே வீரர் ஹேசல்வுட்டுக்கு ஏற்பட்ட திடீர் காயம் – அவருக்கு பதில் களமிறங்கும் மாற்று வீரர் அறிவிப்பு

0
80
Jos Hazlewood

ஆஸ்திரேலிய அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான வரலாற்றுச் சிறப்புமிக்க ஆஷஸ் தொடரில் பங்கேற்று வருகிறது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடராக இது விளையாடப்பட்டு வருகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த தொடரில் ஆஸ்திரேலிய அணி தொடரை சமன் செய்தது. அதற்கு முந்தைய தொடரான 2017ஆம் தொடரை ஆஸ்திரேலியா வென்று இருந்ததால் ஆஷஸ் கோப்பை ஆஸ்திரேலிய அணி வசமே இருக்கிறது. அதை மீட்டு தனதாக்கும் முயற்சியில் தற்போது இங்கிலாந்து அணி களம் காண்கிறது. முதல் டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலிய அணியின் அசைக்க முடியாத கோட்டையாகத் கருதப்படும் பிரிஸ்பன் மைதானத்தில் நடந்தது. இதில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி எளிதாக வெற்றி பெற்றது.

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் வெறும் 147 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணி இந்த அளவு மோசமான ஸ்கோரை பெற்றதற்கு முக்கிய காரணம் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ஹேசல்வுட். இங்கிலாந்து அணியின் சிறந்த பேட்ஸ்மேனாக விளங்கிக் கொண்டிருக்கும் அந்த அணியின் கேப்டன் ஜோ ரூட்டை ரன் எதுவும் எடுக்காமல் வெளியேற்றினார் ஹேசல்வுட். கூடவே அந்த அணியின் மற்றும் சிறந்த பேட்ஸ்மேன் ஆனால் மாலனையும் அவர் வெளியேற்றினார். இரண்டாவது இன்னிங்சில் மாலன் 82 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

இப்படி இங்கிலாந்து அணியின் முக்கிய படை வக்ஷவீரர்களை எல்லாம் வரிசையாக வெளியேற்றிய ஹேசல்வுட் அடுத்த டெஸ்ட் போட்டியில் பங்கேற்க மாட்டார் என்று ஆஸ்திரேலிய நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் அடைந்த காயமே இதற்கு காரணமாகும். ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சும் முக்கிய முகமாக விளங்கி வரும் இவர் இல்லாதது அணிக்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தக் கூடும். இவருக்கு பதிலாக உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் ஜை ரிச்சர்ட்சன் அணியில் சேர்க்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிக நேரம் ஒரே இடத்தில் சிறப்பாக பந்து வீசும் திறமை பெற்ற ஹேசல்வுட் இல்லாத குறையை ஆஸ்திரேலிய அணி அடுத்த டெஸ்டில் எப்படி தீர்க்கப் போகிறது என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்