விராட் கோலி & பாபர் அசாம் இருவரில் யாருடைய கவர் டிரைவ் சிறந்தது ? ஜோஸ் பட்லர் தேர்வு

0
1437
Virat Kohli Babar Azam and Jos Buttler

ஐ.பி.எல் பதினைந்தாவது சீசனின் முதல் பாதி முடிந்து, இரண்டாம் பாதி துவங்கும் நிலையிலிருக்க, மெல்ல மெல்ல மீண்டும் இரசிகர்கள் ஐ.பி.எல் தொடருக்குள் தங்களை நுழைத்துக்கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள்.

ஆட்டங்களும் பரபரப்பிற்குப் பஞ்சமில்லாமல் செல்ல துவங்கி இருக்கின்றன. இந்தத் தொடரில் அதிக விக்கெட் எடுத்தவர்களின் பட்டியலில் முதல் இடத்தில் யுஸ்வேந்திர சாஹலும், அதிக ரன் அடித்தவர்களின் பட்டியலில் முதல் இடத்தில் இங்கிலாந்தின் ஜோஸ் பட்லரும் இருக்கிறார். இருவருமே ராஜஸ்தான் அணி என்பது குறிப்பிடத்தக்கது!

முன்பு சச்சினா? லாராவா? என்று ஒப்பிடப்பட்டு கேள்விகளும், விவாதங்களும் முடிவில்லாமல் தொடர்ந்த மாதிரி, இன்றைய நவீன கிரிக்கெட்டில் விராட்கோலியுடன், ஸ்டீவன் ஸ்மித், ஜோ ரூட், கேன் வில்லியம்சன் போன்றவர்களை ஒப்பிட்டு அலசி, தற்போது பாகிஸ்தானின் பாபர் ஆஸமைக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

இவர்கள் இருவரையும் வைத்து, தற்போது ஜோஸ் பட்லரிடம் யாருடைய கவர்-டிரைவ் சிறந்தது என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு ஜோஸ் பட்லர் விராட்கோலியின் கவர்-டிரைவே சிறந்தது என்று கூறியிருக்கிறார். இது விராட்கோலியின் இரசிகர்களை மகிழ்ச்சியாக்கி இருக்கிறது!